YouTurn

பிளாஸ்டிக் மூலம் தயாரித்த பெட்ரோல் ரூ.40க்கு விற்பனை !

பிளாஸ்டிக் மூலம் தயாரித்த பெட்ரோல் ரூ.40க்கு விற்பனை !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஹைதராபாத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியரான சதீஸ் குமாரின் முக்கிய இலக்கு சுற்றுப்புறச்சூழலின் மிகப்பெரிய பிரச்சனையை தீர்ப்பதே. பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகம் என்பதால் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. அவற்றை மறுசுழற்சி செய்வதோ, அவை விரைவாக மக்கவோ...

பரவிய செய்தி

பிளாஸ்டிக்கை வைத்து பெட்ரோல் தயாரித்து ரூ.40-க்கு விற்பனை செய்து அசத்தல். கல்லூரி பேராசிரியரின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்.

விரிவான விளக்கம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியரான சதீஸ் குமாரின் முக்கிய இலக்கு சுற்றுப்புறச்சூழலின் மிகப்பெரிய பிரச்சனையை தீர்ப்பதே. பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகம் என்பதால் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. அவற்றை மறுசுழற்சி செய்வதோ, அவை விரைவாக மக்கவோ வாய்ப்பில்லை.



இந்நிலையில், பேராசிரியர் சதீஷ் குமார் 50 டன் எடையுள்ள மக்காத பிளாஸ்டிக்கை கொண்டு பெட்ரோல் தயாரித்து வருகிறார். அவ்வாறு தயாரிக்கப்படும் பெட்ரோல் ஆனது சந்தையில் இருக்கும் விலையை விட குறைவாக ரூ.40-க்கு சிறிய மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.



எனினும், இவ்வாறு பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட எரிபொருள் வாகனங்களில் பயன்படுத்தி சோதனை செய்யவில்லை. அதற்கு பதிலாக தொழிற்சாலைகளில் இயங்கும் இயந்திரங்களில் பயன்படுத்தி, அதில் வெற்றிலும் கண்டுள்ளனர். பாலிவினைல் குளோரைடு(பிவிசி) மற்றும் பாலிஎத்திலீன் தெராப்தலேட்(பிஇடி) தவிர பிற எந்த பிளாஸ்டிக்கையும் கொண்டு பெட்ரோல் தயாரிக்க முடியும் என்கிறார் குமார்.

" பிளாஸ்டிக் ப்யரோலிசிஸ் " என அழைக்கப்படும் மூன்று படிநிலை செயல்முறையின் உதவியுடன் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையானது பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து டீசல், ஏவியேஷன் எரிபொருள், பெட்ரோல் உள்ளிட்டவை தயாரிக்க உதவுகிறது. மறுசுழற்சி செய்யப்படாத 500கிலோ எடைக் கொண்ட பிளாஸ்டிக் கொண்டு 400 லிட்டர் எரிபொருள் தயாரிக்க முடியும் என்கிறார்.



இது எளிமையான முறை, இதற்கு தண்ணீர் தேவையில்லை. அதேபோன்று அசுத்த நீரையும் வெளியிடுவதில்லை. இந்த செயல்முறை வெற்றிடத்தில் நிகழ்வதால் காற்று மாசுபடுதல் இல்லை என்று குமார் தெரிவித்து இருக்கிறார்.

தற்பொழுது சதீஷ் குமார் உடைய நிறுவனம், நாள் ஒன்றுக்கு 200கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து 200 லிட்டர் பெட்ரோல் தயாரித்து உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு லிட்டர் ரூ.40 முதல் 50 என விற்பனை செய்து வருகின்றனர்.

சுருக்கமாக

பிளாஸ்டிக்கை கொண்டு தயாரித்த பெட்ரோலை சந்தையில் உள்ள விலையை விட குறைவாக ரூ.40க்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால், வாகனங்களுக்கு அல்ல. எதற்கு பயன்படுத்துகிறார் என்பதை தொடர்ந்து படியுங்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…