YouTurn

பிளாஸ்டிக் முட்டை கோஸ் எனத் தவறாகப் பரவும் விளம்பரத்திற்காகத் தயாரிக்கப்பட்ட உணவு மாதிரி !

பிளாஸ்டிக் முட்டை கோஸ் எனத் தவறாகப் பரவும் விளம்பரத்திற்காகத் தயாரிக்கப்பட்ட உணவு மாதிரி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பிளாஸ்டிக் முட்டை கோஸ்



Facebook link

விரிவான விளக்கம்

பிளாஸ்டிக் முட்டை கோஸ் தயாரிக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்தில் திரவங்களைக் கொண்டு முட்டை கோஸ் தயாரிக்கிறார். ’இதை எல்லாம் வாங்கி சாப்பிட்டால் நமது உடல்நிலை என்ன ஆவது’ என்று ஒருவர் அந்த வீடியோவில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். 


Facebook link


உண்மை என்ன ? 

பரவக் கூடிய பிளாஸ்டிக் முட்டை கோஸ் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அது விளம்பரத்திற்காக உணவகங்களில் வைக்கப்படும் மாதிரி உணவுப் பொருள் என்பது தெரியவந்தது. 



இதே போன்று பிளாஸ்டிக் முட்டை கோஸ் தயாரிப்பதாக வேறொரு வீடியோ 2016ம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது. அந்த வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஞ் சர்ச் மூலம் தேடினோம். அந்த வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய ஒரு யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 



அதன் நிலைத்தகவலில் (Description) ‘ஜப்பான், கிஃபு (Gifu) மாகாணத்திலுள்ள குஜோ (Gujo) நகரத்தில் உணவகங்களில் மெனுவைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் அல்ட்ரா-ரியலிஸ்டிக் உணவு மாதிரிகளை உருவாக்கும் தொழில்நுட்பம். இந்த மாதிரிகள் பிளாஸ்டிக், மெழுகு மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்டவை, பின்னர் வண்ணம் பூசப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜப்பான் உணவகங்களில் மெனு மாதிரிக்காக வைக்கப்படும் போலி உணவுகள் பெரும்பாலும் குஜோ நகரத்தில் தயாரிக்கப்படுவதாக ’Great Big Story’ யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் பல வகையான சைவ அசைவ உணவுப் பொருள்கள் போலியாக உருவாக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது. இத்தகைய போலி உணவுகள் ஜப்பானில் 90 மில்லியன் டாலர் தொழிலாக எப்படி மாறியது என ’Business Insider’ வீடியோ பதிவிட்டுள்ளது. 

மேற்கொண்டு இது குறித்துத் தேடியதில், தற்போது பரவக் கூடிய வீடியோவில் உள்ள முதியவரின் வேறொரு வீடியோ’Process X’ என்ற யூடியூப் பக்கத்தில் காண முடிந்தது. ‘53 ஆண்டுகளாகப் போலி உணவு தயாரித்து வரும் 71 வயது கைவினைஞர்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பல போலி உணவுகளைத் தயார் செய்தும் காண்பிக்கிறார். பரவக் கூடிய வீடியோவில் உள்ள முதியவரின் டீ-ஷர்ட்டில் இருக்கக் கூடிய பெயரும் கடையின் பெயரும் ஒன்றாக உள்ளது. 



இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோ ஜப்பானில் உள்ள உணவகங்களில் மெனு தொடர்பாக வைக்கக்கூடிய உணவு மாதிரி (போலி உணவு) என்பதை அறிய முடிகிறது. அப்படி விளம்பரத்திற்காகத் தயாரிக்கப்படும் போலி முட்டை கோஸ் வீடியோவைதான் தவறாகப் பரப்புகின்றனர். இது உணவிற்கு பயன்படுத்தப்படுவதில்லை.

மேலும் படிக்க : பிளாஸ்டிக் முட்டைகள் தயாரிப்பதாகத் தவறாகப் பரவும் சீன பொம்மைகள் தயாரிப்பு வீடியோ !

இதற்கு முன்னர் இதே போன்று போலி முட்டை, போலி சர்க்கரை எனப் பல உணவுப் பொருட்கள் குறித்து வதந்திகள் பரப்பப்பட்டன. அவை பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயா‌ரிக்கும் ஆலை பிடிபட்டதாகப் பரப்பப்படும் வதந்தி வீடியோ !

முடிவு : 

நம் தேடலில், சந்தைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் முட்டை கோஸ் எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இது ஜப்பானில் உள்ள உணவகங்களில் மாதிரிக்காக வைக்கத் தயாரிக்கப்படும் போலி உணவுகள் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க