YouTurn

"பிளாஸ்மா நன்கொடையாளர்கள்" என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் !

"பிளாஸ்மா நன்கொடையாளர்கள்" என தவறாக பரவும் இரத்த தானம் அளிப்பவர்கள் பட்டியல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

64 பேரின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களைக் கொண்ட பட்டியல் " பிளாஸ்மா நன்கொடைக்கு " தயாராக உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் பட்டியலில் உங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் ஃபார்வர்டு தகவல் ஒன்று பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாகிய முதல் இச்செய்தி பரவி வருகிறது...

பரவிய செய்தி

அன்பிற்குரிய நண்பர்களே.. கோவிட் சிகிச்சைக்கு பிளாஸ்மா தேவைப்படும் எவரும் தயவுசெய்து இவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிளாஸ்மா நன்கொடை செய்யத் தயாராக உள்ள ஒரு குழுவிலிருந்து: நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்

விரிவான விளக்கம்

64 பேரின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களைக் கொண்ட பட்டியல் " பிளாஸ்மா நன்கொடைக்கு " தயாராக உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் பட்டியலில் உங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் ஃபார்வர்டு தகவல் ஒன்று பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாகிய முதல் இச்செய்தி பரவி வருகிறது. இரத்த பிளாஸ்மா சிகிச்சை சோதனை சிகிச்சையாக நடத்தப்பட்டன. மீட்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் இரத்தத்தில் இருந்து ஆன்டிபாடிகளை பயன்படுத்தி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாக கொண்டது பிளாஸ்மா சிகிச்சை.

பரவி வரும் பெயர்களையும், எண்களையும் வைத்து தேடுகையில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Blood Donor R எனும் முகநூல் பக்கத்தில் இதே பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் கூடுதலாக பிளாஸ்மா வாக்கியத்தை மட்டும் இணைத்து உள்ளார்கள்.



Facebook link | archive link 

2016-ல் பகிரப்பட்ட இரத்ததானம் அளிப்பவர்களின் பட்டியல் கடந்த சில ஆண்டுகளாக முகநூல் பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவே இப்பட்டியலை ஒருங்கிணைத்து இருக்கலாம். இந்த தகவல் ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் உள்ளவர்களை குறிக்கிறது.

அந்த எண்களில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்ட போது  சில எண்கள் அழைப்புகளை எடுக்கவில்லை, சில பயன்பாட்டில் இல்லை. எனினும், ஒருவர் நமக்கு அளித்த பதிலில், இது பழைய இரத்த தானம் செய்த குரூப். முன்பு நான் வழங்கி இருந்தேன் எனக் கூறி இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பகிரப்பட்டு வந்த இரத்த தானம் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களைக் கொண்ட பட்டியலை கோவிட்-19 சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம் அளிக்க தயாராக இருப்பதாக தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க