YouTurn

சந்தைக்கு வந்துள்ள புதிய கேக்குகளில் ஆபத்தான மாத்திரைகளா ?| உண்மை என்ன?

சந்தைக்கு வந்துள்ள புதிய கேக்குகளில் ஆபத்தான மாத்திரைகளா ?| உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குழந்தைகள் உண்ணக்கூடிய கேக்குகள், ஜோக்ஸ் எனும் பிஸ்கட்களில் மாத்திரைகள் இருக்கும் புகைப்படங்கள், குழந்தை சிகிச்சையில் இருக்கும் புகைப்படங்களை இணைத்து இந்து, முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக கூறி ஒருவர் தமிழில் பதிவிட்டு உள்ளார். Facebook link | archived link அவர்...

பரவிய செய்தி

சந்தையில் ஒரு புதிய கேக் வந்துவிட்டது, லூபோ நிறுவனத்தில் ஒரு டேப்லெட் சொருகப்பட்டுள்ளது, அதை சாப்பிடுவது குழந்தைகளுக்கு பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது இந்து முஸ்லிம் பகுதியில் விற்கப்படுகிறது.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

குழந்தைகள் உண்ணக்கூடிய கேக்குகள், ஜோக்ஸ் எனும் பிஸ்கட்களில் மாத்திரைகள் இருக்கும் புகைப்படங்கள், குழந்தை சிகிச்சையில் இருக்கும் புகைப்படங்களை இணைத்து இந்து, முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக கூறி ஒருவர் தமிழில் பதிவிட்டு உள்ளார்.



Facebook link | archived link

அவர் ஆங்கிலத்தில் வெளியான வீடியோ உடன் கூடிய வாசகத்தை மொழிப் பெயர்த்து முகநூலில் பகிர்ந்து உள்ளார் என்பதை கிடைத்த மற்றொரு பதிவில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டோம்.

புகைப்படங்களின் ஆரம்பம் : 



கேக்குகள் மற்றும் பிஸ்கெட்களில் மாத்திரைகள் இடம்பெற்று இருக்கும் புகைப்படங்களின் தொகுப்பானது இந்தியாவில் எடுக்கப்பட்டவை அல்ல. இத்தகைய கேக்குகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புகளில் மாத்திரைகள் இடம்பெற்று இருப்பதாக செய்திகளில் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே பரவி வருகின்றன.



Twitter link | archived link

எனினும், கேக்குகளில் மாத்திரைகள் இருப்பதாக வைரலான படங்கள் கடந்த 2019 டிசம்பரில் ஈரான் நாட்டில் பிரச்சனையை கிளப்பியவை. ஈரானின் எல்லையோர சிஸ்டன் மற்றும் பாலுஸ்தான் மாகாண பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கேக்குகள், பிஸ்கெட்களில் மாத்திரைகள் இருப்பதாக வெளியான செய்தியால், அந்த தயாரிப்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.



12 மிட்டாய் பிராண்டுகளின் தயாரிப்புகளில் மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் கூறுகையில், " இது நாட்டின் மிகச்சிறந்த தொழில்களில் ஒன்றாக இருக்கும் அனைத்து உணவு மற்றும் மிட்டாய் தொழில்துறையின் மீது இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலைப்பாடு " எனக் கூறியுள்ளார்.

மேலும் ஜஹான்பூர் கூறுகையில், மாத்திரையின் நிறம் மற்றும் கலவையில் மாற்றமும் ஏற்படவில்லை. மாத்திரையானது உற்பத்தி மற்றும் விநியோக நிலைக்கு பிறகே பல்வேறு பேக்கேஜ்களில் இடம்பெற்று உள்ளன என்பதை தெரியப்படுத்துகிறது. எந்தவொரு தயரிப்புகளிலும் போதைப்பொருள் அல்லது வதந்தியான அலுமினிய பாஸ்பைட் மாத்திரைகள் வைக்கப்படவில்லை " எனக் குறிப்பிட்டு உள்ளார்.

ஈரானில் கேக்குகளில் இருக்கும் மாத்திரைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆதாரங்கள் இல்லை. இந்த கேக்கை உண்டு பாதிக்கப்பட்ட குழந்தை என சமூக வலைதளங்களில் பகிரப்படும் குழந்தையின் புகைப்படம் ஆனது ரிவர்ஸ் இமேஜ் சேர்சில் கிடைக்கவில்லை மற்றும் செய்திகளிலும் கிடைக்கவில்லை. மருத்துவ சிகிச்சை பெறும் ஒரு குழந்தையின் புகைப்படத்தை இணைத்து உள்ளனர் என யூகிக்க முடிகிறது.

கேக் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புகளில் மாத்திரைகள் இருப்பதாக வெளியாகும் புகைப்படங்கள் வெளியாவது புதிது அல்ல. அவ்வபோது வெளியாகும் இதுபோன்ற புகைப்படங்களின் குறைந்தபட்ச உண்மைத்தன்மை அறியாமலேயே சமூக வலைதளங்களில் வைரல் செய்கின்றனர். தயாரிப்பு நிறுவனங்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட நாட்டின் தயாரிப்புகளின் விற்பனையை அந்நாட்டில் குறைக்கக்கூட இதுபோன்ற செயலில் ஈடுபடுவர்கள் உள்ளனர்.

நம்முடைய தேடலில் இருந்து, கேக் மற்றும் பிஸ்கெட்களில் மாத்திரைகள் இருப்பதாக வெளியான புகைப்படங்கள் ஈரான் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியவை என்பதை அறிய முடிகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. மேலும், அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்து இருந்தனர்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை போன்று, குழந்தைகள் உண்ணக்கூடிய கேக்குகளில் இடம்பெற்ற மாத்திரைகளால் பக்கவாதம் ஏற்படுவதாகவோ அல்லது இந்து, முஸ்லீம் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக கூறுவது ஆதாரமில்லாதவை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…