YouTurn

கும்ப கர்ணனின் வாள் என்று பரப்பப்படும் புகைப்படங்கள்!

கும்ப கர்ணனின் வாள் என்று பரப்பப்படும் புகைப்படங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தப் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டவை.

பரவிய செய்தி

கும்ப கர்ணனின் வாள் கண்டுபிடிக்கப்பட்டது, ராமாயணம் நடந்தது என்பதற்கு இதைவிட ஆதாரம் இல்லை..
ஜெய் ஸ்ரீ ராம்


X Link

விரிவான விளக்கம்

கிரேன் இயந்திரத்தை கொண்டு மட்டுமே தூக்க முடியும் என்ற அளவிற்கு மிகப்பெரிய அளவிலான வாள் ஒன்றின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு 'இராமாயண காலத்தில் வாழ்ந்த கும்ப கர்ணனின் வாள் கண்டுபிடிக்கப்பட்டதாக' தகவல் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1845689674896941199

உண்மை என்ன?

 

இந்த தகவலின் உண்மைத்தன்மையை அறிய, தேடுபொறியில் "Gaint sword found" என்ற வார்த்தைகளைக் கொண்டு தேடினோம்.

 

அப்பொழுது, 'துருக்கியில் 3000 ஆண்டு பழமையான வாள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக' கூறி இதே போன்ற வேறு  புகைப்படங்கள் பரப்பப்பட்டன. 'Snopes.Com'  என்ற இணையதளம், அவை AI  தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று அம்பலப்படுத்தியிருந்த செய்தியை காண முடிந்தது.


இதன்படி 'Hugging face' என்னும் தளத்தை பயன்படுத்தி, நாம் சோதனை செய்து பார்த்தோம். அந்தக் காணொலியில் இருந்த நான்கு புகைப்படங்களையும் தனித்தனியாக சோதனை செய்தோம். அதன்மூலமாக, அவை அனைத்தும் AI  தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்தது.


 


Smart phone -களும் இணைய வசதியும் பரவலாகிவிட்ட இன்றைய காலத்தில், தங்களது சொந்த நம்பிக்கைகளுக்கு இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை முன்வைத்துப் பரப்பும் போக்கு அதிகரித்துள்ளது. அந்தவகையில் தான் AI  தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், கும்ப கர்ணனின் வாள் கண்டுபிடிக்கப்பட்டதாக  பொய்யாக பரப்பப்படுகிறது.

 

முடிவு:

 

கும்ப கர்ணனின் வாள் கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. அவை AI  தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படங்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க