யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருவண்ணாமலையில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் மலையில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக பரவுவது தவறானவை. பல நாட்களாகவே இந்த மலை இப்படி தான் தோற்றமளிக்கிறது. இது தொடர்பான பல்வேறு புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உள்ளது.
பரவிய செய்தி
திருவண்ணாமலையில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் மலையில் மிகப் பெரிய நிலச்சரிவு Land slide ஏற்பட்டிருக்கு. போல.
கடந்த சில வருடங்களாகவே இந்த மலையை சுற்றி நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம் என்று யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. இந்த மாதிரி நான் எப்பொழுதும் இந்த மலையை பார்த்ததே இல்லை.

விரிவான விளக்கம்
திருவண்ணாமலையில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் மலையில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சில வருடங்களாகவே இந்த மலையை சுற்றி நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. குறிப்பாக மணல் கொள்ளையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் மலையில் மிகப் பெரிய நிலச்சரிவு Land slide ஏற்பட்டிருக்கு. போல.
கடந்த சில வருடங்களாகவே இந்த மலையை சுற்றி நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம் என்று யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. இந்த மாதிரி நான் எப்பொழுதும் இந்த மலையை… pic.twitter.com/DQhdifWdKS
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது Mark Whitwell என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேறு ஒரு பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட இதே புகைப்படம் ஜனவரி 25, 2026 அன்று பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் புனிதமான அருணாச்சல மலையின் மீது, ஆனந்தமயமான ஒரு சுடரைப் போன்ற மிகச் சிறந்த யோனி வடிவம் ஒன்று அற்புதமாகத் தோன்றியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, yogini_ishani என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிப்ரவரி 12, 2026 அன்று இதே புகைப்படம் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
அதே போல் yoga with at suko என்ற இஸ்டாகிராம் பக்கத்திலும், ஒரு மயில் என் ஜன்னலுக்கு வந்தது. அங்கிருந்து விலகிச் செல்வது கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டு, இதே புகைப்படம் மார்ச் 02, 2026 ஆண்டு பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், பல நாட்களாகவே இந்த மலை இப்படி தான் தோற்றமளிக்கிறது. இது தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உள்ளது. இதை தற்போது திருவண்ணாமலையில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் மலையில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக தவறாகப் பரப்புகின்றனர்.