YouTurn

நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையில் இருக்கும் 'மிஸ்டர் பீன் நடிகர்' எனப் பரவும் போலியான புகைப்படம்!

நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையில் இருக்கும் 'மிஸ்டர் பீன் நடிகர்' எனப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மிஸ்டர் பீன் புகழ் நடிகர் ரோவன் அட்கின்சன் தற்போது படுத்த படுக்கையில் இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

யாருக்கெல்லாம் நம்ம மிஸ்டர் பீன் பிடிக்கும். இளமை அது போனால்...அது திரும்பாது.. இருக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாமும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்… எல்லோருக்கும் ஒரு காலம் முதுமை வரும்..

Facebook Link:

விரிவான விளக்கம்

மிஸ்டர் பீன் புகழ் நடிகர் ரோவன் அட்கின்சன் (Rowan Sebastian Atkinson), நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையில் இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் அப்புகைப்படத்தில், 1990 மற்றும் 2024 என்று குறிப்பிட்டு அவருடைய இரண்டு புகைப்படங்கள் ஒப்பீடு செய்யப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. 


உண்மை என்ன?

நோய்வாய்பட்டு படுத்தப் படுக்கையாக இருப்பதாகக்கூறி உலகம் முழுவதும் பரவி வரும் நடிகர் ரோவன் அட்கின்சனின் புகைப்படம் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், அவர் தற்போது நலமுடன்தான் உள்ளார் என்பதை அறிய முடிந்தது. 

Behind Grand Prix என்ற யூடியூப் பக்கத்தில், "ரோவன் அட்கின்சன் (மிஸ்டர் பீன்) மார்ட்டின் பிரண்டிலை கேலி செய்கிறார், அது அவருக்குத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டு ஜூலை 10 அன்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் கடந்த வாரம் பிரிட்டனில் நடந்த ஃபார்முலா 1 கார் பந்தயமான பிரிட்டிஷ் கிரான்ட் ப்ரிக்ஸ் (British Grand Prix) போட்டியைக் காண ரோவன் அட்கின்சன் சென்ற போது அவரிடம் பேட்டி எடுத்தது தொடர்பாக வீடியோ வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.


இதன்மூலம் நடிகர் ரோவன் அட்கின்சன் தற்போது நோய்வாய்பட்டு படுத்தப் படுக்கையாக இருப்பதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது. சமீபத்தில் கூட அவர் ஃபார்முலா 1 கார் பந்தய நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். 

மேலும் பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், "Manchester Evening News" என்ற பிரிட்டன் இணையதளத்தில், சரியான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் 45 கிலோ எடையில் உயிரிழந்த ஒரு வயதானவர் குறித்து கடந்த 2020 ஜனவரி 30 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.


இதில் குறிப்பிடப்பட்டுள்ள வயதானவரின் இந்தப் புகைப்படம், தற்போது பரவி வரும் நடிகர் ரோவன் அட்கின்சனின் புகைப்படத்தோடு கச்சிதமாகப் பொருந்துவதை தெளிவாகக் காண முடிகிறது. 

எனவே சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் புகைப்படம் உண்மையானது அல்ல. 75 வயதான பாரி பால்டர்ஸ்டோன் இறந்தார் என்று குறிப்பிட்டு வெளியிடப்ட்டிருந்த வயதானவரின் புகைப்படம் ஒன்றை சிலர் எடிட் செய்து, மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சனின் தற்போதைய புகைப்படம் என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 

முடிவு:

நம் தேடலில், நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையில் இருக்கும் 'மிஸ்டர் பீன் நடிகர்' எனப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க