YouTurn

’லைலா - மஜ்னு’ என்று தவறாக பரப்பப்படும் புகைப்படம்!

’லைலா - மஜ்னு’ என்று தவறாக பரப்பப்படும் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இதிலிருக்கும் பெண் புகைப்படம் 19ஆம் நூற்றாண்டின் இறுதில் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை Edit செய்து உருவாக்கப்பட்டதாகும். இதிலிருக்கும் பெண் ’Bedouins’ என்று சொல்லக்கூடிய அரேபிய மொழி பேசும் நாடோடி இனத்தை சேர்ந்தவர்.

பரவிய செய்தி

OMG...இவங்கதான் லைலாவா???

Instagram Link | Archived Link

விரிவான விளக்கம்

இவர்கள் தான் லைலா - மஜ்னு என்றும், இவர்கள் தான் உண்மை காதலர்கள் என்றும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது commons. wikimedia .org என்ற பக்கத்தில் பரவி வரும் புகைப்படம் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. இதிலிருக்கும் பெண் புகைப்படம் 19ஆம் நூற்றாண்டின் இறுதில் எடுக்கப்பட்டதாகும். பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் பெண் ’Bedouins’ என்று சொல்லக்கூடிய அரேபிய மொழி பேசும் நாடோடி இனத்தை சேர்ந்தவர். இந்த புகைப்படத்தை தான் தற்போது எடிட் செய்து லைலா என்று பரப்புகின்றனர். 

image.png


அதே போல் alamy .com என்ற இணையதளப்பக்கத்திலும், "Bust of a Bedouin woman ca. 1898-1914" என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படம் இருப்பதை பார்க்கமுடிந்தது. அதில் இந்த புகைப்படம் 1898ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இதையடுத்து லைலா - மஜ்னு குறித்து தேடி பார்த்தோம். அப்போது britannica .com இணையதளப்பக்கத்தில் நிஜாமி கஞ்சாவியின் சுயசரிதை இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ’நிஜாமி கஞ்சாவி’ என்ற பாரசீக கவிஞரால் எழுதப்பட்டது தான் ‘லெய்லா மற்றும் மஜ்னு’-வின் கதை. இந்த கதையில் வரும் கதாபார்த்திரங்கள் அனைத்தும் கற்பனையே என்பதும் தெரியவந்தது. 

image.png

முடிவு: 

நம் தேடலில், 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கற்பனை பாத்திரங்களான ’லைலா - மஜ்னு’-வின் புகைப்படம் என்று பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருவது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க