YouTurn

வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய வரிகள் என்று பரவும் புகைப்படம்!

வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய வரிகள் என்று பரவும் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது, கவிஞர் வைரமுத்து தாஜ் மஹால் என்ற திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலுக்காக எழுதிய பாடல் வரிகள். இதை ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய வரிகள் என்று குறிப்பிட்டு அவருடைய புகைப்படத்துடன் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

மானம் தானே வேட்டி சட்டை, மத்ததெல்லாம் வாழை மட்டை. மானம் காக்க வீரம் வேணுமடா - வீரபாண்டிய கட்டபொம்மன்

X Link

விரிவான விளக்கம்

மானம் தானே வேட்டி சட்டை, மத்ததெல்லாம் வாழை மட்டை. மானம் காக்க வீரம் வேணுமடா என்று ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய வரிகள் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன?

முதலில் இந்த வரிகள் குறித்து கூகுள் தேடிப் பார்த்தோம். அப்போது deeplyrics. in என்ற இணையதளப்பக்கத்தில் தாஜ்மஹால் என்ற திரைப்படத்தில் 'திருப்பாச்சி அருவாள' என்ற பாடல் வரிகளுக்கு அழைத்து சென்றது. அதில் இரண்டாவது பல்லவியில் ”உப்பு தின்னா தண்ணி குடி…தப்பு செஞ்சா தலையிலடி..பரம்பரையா எங்க கொள்கையடா…மானம் தானே வேட்டி சட்ட…மத்ததெல்லாம் வாழ மட்ட…மானம் காக்க வீரம் வேணுமடா” என்று பரவி வரும் வரிகள் இடம்பெற்றிருந்ததை காணமுடிந்தது. 


இதையடுத்து இந்த பாடலை யூடியூப் தேடிப் பார்த்தோம். New Music Plex என்ற பக்கத்தில், ”Tirupatchi Aruvalla Video Song | Tajmahal | Manoj | Riyasen | A.R.Rahman | Vairamuthu” என்ற தலைப்பில் பாடலுடைய வீடியோ வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் சரியாக 4:52 நிமிடத்தில் பரவி வரும் வரிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அதில் இந்த பாடலை வரிகளை எழுதியது கவிஞர் வைரமுத்து என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது, கவிஞர் வைரமுத்து தாஜ் மஹால் என்ற திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலுக்காக எழுதிய பாடல் வரிகள் என்பது தெரியவந்தது. இதை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய வரிகள் என்று குறிப்பிட்டு அவருடைய புகைப்படத்துடன் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க