YouTurn

நாதக மரங்கள் மாநாடு நடந்த இடம் என்று தவறாக பரவும் புகைப்படம்!

நாதக மரங்கள் மாநாடு நடந்த இடம் என்று தவறாக பரவும் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் பொள்ளாச்சி வனப் பகுதியைச் சேர்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிப்பிட்டு, மரங்கள் மாநாடு நடைபெற்ற இடத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

நேத்து நடந்த மரங்கள் மாநாடு இடத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் மாநாடு நடந்த இடத்தில் தண்ணீர் பாட்டில்கள் போடப்பட்டுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

முதலில் மரங்கள் நடைபெற்றது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது கலாட்டா ஊடகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று “நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களுக்ககான மாநாடு தொடங்கியது..!” என்ற தலைப்பில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் இருக்கும் புகைப்படமும்,  பரவி புகைப்படமும் வேறு வேறு என்பதை உறுதி செய்யமுடிந்தது. 


இதையடுத்து பரவி வரும் புகைப்படத்தை ஆய்வு செய்து பார்த்தோம்.  அப்போது அதில் இருக்கும் புகைப்படத்தில் பொள்ளாச்சி வனப் பகுதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மாநாடு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்றது. இந்நிலையில் பொள்ளாச்சி வனப் பகுதியைச் சேர்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிப்பிட்டு, மரங்கள் மாநாடு நடந்தயிடம் என்று பரப்பி வருவது தெரியவந்தது. 


முடிவு: 

நம் தேடலில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாடு நடைபெற்றது.  இந்நிலையில் பொள்ளாச்சி வனப் பகுதியைச் சேர்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிப்பிட்டு, மரங்கள் மாநாடு நடைபெற்ற இடத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க