YouTurn

இது பீனிக்ஸ் பறவையா ? | வதந்திக்கும் அளவில்லையா !

இது பீனிக்ஸ் பறவையா ? | வதந்திக்கும் அளவில்லையா !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பீனிக்ஸ் பறவையின் ஆச்சரியமான கதைகள் பற்றிக் கேட்டறிந்து இருப்போம். ஆகையால், பீனிக்ஸ் பறவை உருவத்தை பலரும் பல்வேறு வடிவங்களில் உருவாக்கி இருப்பர். ஆனால், பீனிக்ஸ் பறவையை யாரும் பார்த்ததில்லை. அவை கற்பனையா ? அல்லது உண்மையானவையா என்ற சர்ச்சை இருந்து வருகிறது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் இது தான்...

பரவிய செய்தி

இது தான் பீனிக்ஸ் பறவை காண கிடைக்காத ஒன்று.

விரிவான விளக்கம்

பீனிக்ஸ் பறவையின் ஆச்சரியமான கதைகள் பற்றிக் கேட்டறிந்து இருப்போம். ஆகையால், பீனிக்ஸ் பறவை உருவத்தை பலரும் பல்வேறு வடிவங்களில் உருவாக்கி இருப்பர்.

ஆனால், பீனிக்ஸ் பறவையை யாரும் பார்த்ததில்லை. அவை கற்பனையா ? அல்லது உண்மையானவையா என்ற சர்ச்சை இருந்து வருகிறது.

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் இது தான் பீனிக்ஸ் பறவை காண கிடைக்காத ஒன்று எனப் பதிவிட்டு பல ஷேர்களையும் பெற்றது.

அவ்வாறு பதிவிட்ட பறவையின் உருவம் பீனிக்ஸ் அல்ல, “ Thunder bird “ என அழைக்கப்படுபவை. அவையும் நிஜமல்ல.



மாயாஜாலங்கள் நிறைந்த “ Fantastic beasts and where to find them “ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் பறவையின் உருவமாகும். அத்திரைப்படத்தில் பிரம்மாண்டமாக வரும் Thunder bird-ன் தோற்றத்தில் பொம்மைகள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.



2008 ஆம் ஆண்டில் இருந்து உயிரினங்களின் தோற்றத்தில் கலை பொருட்களைச் செய்து வரும் ரஷ்யாவைச் சேர்ந்த “ Ekaterina Gakman “ என்ற பெண் “ Gakman creatures “  என்ற பெயரில் Thunder bird உருவில் பொம்மையை விற்பனை செய்வதாக வெளியிட்டு உள்ளார்.

அதில் வெளியிட்ட புகைப்படமே தற்போது பீனிக்ஸ் பறவை என பரவி வருகிறது. Faux fur, polymer clay, pastels கொண்டு தத்ரூபமாக உருவாக்கப்பட்ட இந்த Thunder bird பொம்மையின் விலை 700 அமெரிக்க டாலர்கள்.

பீனிக்ஸ் பறவை என தவறுதலாக வெளியிட்ட பதிவில் என்ன இருக்கிறது என கூறுவர். இவ்வாறான புரிதல் இல்லாமல் பரப்பும் செய்திகள் தான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் நிரம்பி கிடக்கின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.