YouTurn

தமிழ்நாடு அரசு பெட்ரோல் வாட் வரியை உயர்த்தியதா ? ஒரு லிட்டருக்கு 40ரூபாய் வரி விதிக்கிறதா ?

தமிழ்நாடு அரசு பெட்ரோல் வாட் வரியை உயர்த்தியதா ? ஒரு லிட்டருக்கு 40ரூபாய் வரி விதிக்கிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது தமிழக அரசு !



Archive link 

மத்திய அரசு 1 லிட்டர் பெட்ரோல் 59.94 ரூபாய்க்கு தமிழக அரசுக்கு கொடுக்கிறது திமுக தமிழக அரசு 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது

Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் மோடி தலைமையிலான அரசு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதாக இந்தியா டுடே செய்தியுடன் ஓர் பதிவும், மத்திய அரசு 1 லிட்டர் பெட்ரோல் 59.94 ரூபாய்க்கு தமிழக அரசுக்கு கொடுக்கிறது திமுக தமிழக அரசு 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என மற்றொரு பதிவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் படத்துடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதியமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆகையால், திமுக அரசு பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்கிற விவாதங்களே தற்போதுவரை எழுந்து வருகிறது.



தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு 3.25ரூ மற்றும் டீசலுக்கு 2.50 விலை உயர்த்தியதாக இணைக்கப்பட்ட இந்தியா டுடே செய்தி 2020 மே 3-ம் தேதி வெளியானது. அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதை தற்போது நடந்தது போல் பரப்பி வருகிறார்கள்.

தமிழக அரசு பெட்ரோலுக்கு 40ரூ வரி விதிக்கிறதா ?



இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2021 ஜூலை 1-ம் தேதி டெல்லியின் நிலவரப்படி, " ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 39.29ரூ, கலால் வரி 32.90ரூ, டீலர் கமிஷன் 3.82ரூ, மாநில வாட் வரி 22.80ரூ என மொத்தம் 98.81 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 1-ன் படி, பெட்ரோலின் அடிப்படை விலை, கலால் வரி, டீலர் கமிஷன் என ஒரு லிட்டருக்கு 76.01 என மாநில அரசிடம் வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 100.13 ரூபாய். இதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தமிழ்நாடு வாட் வரி 24.12 ரூபாய் ஆக உள்ளது. இது ஒன்றிய அரசின் கலால் வரியை விடக் குறைவே.



2021 ஜூலை 1-ம் தேதி டீசல் விலை குறித்து மேலே உள்ள அட்டவணையில் காணலாம். சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 93.72 ரூபாயாக உள்ளது. இதில், அடிப்படை விலை, கலால் வரி, டீலர் கமிஷன் என ஒரு லிட்டருக்கு 76.14ரூ ஆகவும், மாநில வாட் வரி 17.58ரூ ஆகவும் இருக்கிறது.

மேலும் படிக்க : பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி விதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடமா ?



ஒரு லிட்டர் பெட்ரோல் மீது தமிழ்நாடு அரசு 15%+13ரூ வாட் வரி விதிக்கிறது, டீசல் மீது ஒரு லிட்டருக்கு 11% + 9.62ரூ வாட் வரி விதிக்கிறது என இந்திய அரசின் Petroleum planning & Analysis cell(PPAC) உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை டாலர் மதிப்பு உயரும் போது பெட்ரோல் மற்றும் டீசலின் அடிப்படை விலை உயர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது விலை உயருகிறது. அதேபோல், கலால் வரி மற்றும் வாட் வரி உயர்ந்தால் கூட விலை ஏற்றம் ஏற்படுகிறது.

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தமிழ்நாடு அரசு 40ரூ வாட் வரி விதிப்பதாகவும் பரவும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க