YouTurn

விலை உயர்வால் வடமாநிலத்தில் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கும் வீடியோவா ?

விலை உயர்வால் வடமாநிலத்தில் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கும் வீடியோவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சொரணை வந்து இதோ ஆரம்பிச்சிட்டானுங்க வடக்கே..



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருவதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வால் வடமாநிலத்தில் பெட்ரோல் பங்க்கை மக்கள் அடித்து நொறுக்குவதாக 45 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .



உண்மை என்ன ?

பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கும் வீடியோ குறித்து தேடுகையில், 2018 அக்டோபர் மாதம் முகநூல் பக்கம் ஒன்றில் இந்த காட்சி அடங்கிய வீடியோ ஒன்று ஒரிசா மாநிலத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளனர்.



ஒரிசாவில் பெட்ரோல் பங்க் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், பெட்ரோல் நிலையத்தில் குறைந்த அளவில் பெட்ரோல் வழங்குவதாக ஏற்பட்ட மோதலால் பங்க்கை உள்ளூர் மக்கள் தாக்கியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.



"ஒரிசாவின் பூரி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளர் குறைந்த அளவே பெட்ரோல் வழங்கி ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியதை அடுத்து ஏற்பட்ட மோதலில் அங்கிருந்த உள்ளூர் மக்களும் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள் " என 2018 செப்டம்பர் 29 ஒரிசா செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், பெட்ரோல் விலை உயர்வால் வடமாநிலத்தில் பெட்ரோல் பங்க்கை மக்கள் அடித்து நொறுக்குவதாக பரவும் வீடியோ தவறானது என அறிய முடிகிறது

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க