YouTurn

மோடிக்கு ஓட்டு போடாதீர்கள்.. வைரலாகும் போலியான பெட்ரோல் பில் !

மோடிக்கு ஓட்டு போடாதீர்கள்.. வைரலாகும் போலியான பெட்ரோல் பில் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விலையைக் குறைக்க 2018இல் செய்தது போலவே இதைச் செய்யுங்கள் என வைரலாகும் பெட்ரோல் பில் !!



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

உங்களுக்கு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றால் மோடிக்கு மீண்டும் ஓட்டு போடாதீர்கள் என 2018-ம் ஆண்டில் மும்பை பெட்ரோல் பங்க் ஒன்றின் பில்லில் குறிப்பிட்டு உள்ளதாகக் கூறி TN Deserves Better எனும் முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.



இந்த பெட்ரோல் பில் ஆனது கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது.



Archive link 

உண்மை என்ன ? 

மும்பையின் விக்ரோலி எனும் பகுதியில் உள்ள சாய் பாலாஜி பெட்ரோலியம் எனும் பெட்ரோல் பங்க்கில் வழங்கப்பட்டதாக வைரலாகும் பெட்ரோல் பங்க் பில் போலியானது. இதுமட்டுமின்றி, இது கையடக்கமான பில்லிங் கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பிக்க வழங்கப்பட்ட ஒரு மாதிரி படத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. மாதிரி பில்லில் உள்ள தேதி மற்றும் எழுத்துக்களில் முரண்பாடுகள் இருப்பதை காண முடிந்தது.



saibalajihandheld.com எனும் பில்லிங் கருவிகள் தொடர்பான இணையதளத்தில் வழங்கப்பட்டு இருக்கும் மாதிரி பெட்ரோல் பங்க் பில் புகைப்படத்தை எடுத்து ஃபோட்டோஷாப் மூலம் மாற்றி இருக்கிறார்கள்.



வைபவ் எனும் வாடிக்கையாளர் பெயரில் 2012-ம் ஆண்டில் போடப்பட்ட பெட்ரோலுக்கான பில் போன்று உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி படத்தில் ஆண்டு மற்றும் மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் உள்ளிட்ட வாசகங்களை ஃபோட்டோஷாப் மூலம் மாற்றி இருக்கிறார்கள். மேலும், அந்த பில்லில் உள்ள வாகன எண்ணில் எந்தவொரு வாகனத்தின் பதிவும் இல்லை.



முடிவு : 

நம் தேடலில், மும்பையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வழங்கப்பட்ட பில்லில் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் என இடம்பெற்றதாக வைரலாகும் பில் போலியானது. பெட்ரோல் பில் மாதிரி ஒன்றில் ஃபோட்டோஷாப் மூலம் உருவாக்கி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க