யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில், இரு சுவர்களுக்கு இடையே பிடிமானம் இல்லாமல் ஏறிய நடிகர் விஜய் தேவரகொண்டா என்று கூறி நியூஸ் தமிழ் ஊடகங்கள் உட்பட பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
நடிகரின் வைரல் வீடியோ; இரு சுவர்களுக்கு இடையே பிடிமானம் இல்லாமல் ஏறிய நடிகர் விஜய் தேவரகொண்டா; கால்களால் மட்டும் பேலன்ஸ் செய்து கொண்டு ஏறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் - நியூஸ் தமிழ் ஊடகம்.
விரிவான விளக்கம்
இரு சுவர்களுக்கு இடையே பிடிமானம் இல்லாமல் ஏறிய நடிகர் விஜய் தேவரகொண்டா என்று கூறி புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. மேலும் சில பதிவுகளில் இவர் “கிங்டம்” படத்திற்காக மேற்கொண்ட ஸ்டண்ட் காட்சிகள் இவை என்றும் குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகிறது.
இதனை ‘நியூஸ் தமிழ்’ ஊடகமும், இரு சுவர்களுக்கு இடையே பிடிமானம் இல்லாமல் ஏறிய நடிகர் விஜய் தேவரகொண்டா என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பதையும் காண முடிகிறது.
#Kingdom lo vijay stunts elane vuntayi anta ni dedication ki hat's off anna @TheDeverakonda #KingdomOnJuly31st #VijayDevarakonda pic.twitter.com/q7zRIAAvJV
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆய்வு செய்துபார்த்ததில், அவர் இது குறித்து எந்த வீடியோவும் பதிவு செய்யவில்லை என்பதை அறிய முடிந்தது.
எனவே வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடி பார்த்தோம். “Mostafa.hormati” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனரின் சுயவிவரங்கள் குறித்து ஆய்வு செய்ததில், வீடியோவில் இருப்பவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் என்பதை அறிய முடிந்தது.
இந்நிலையில் ‘நியூஸ் தமிழ்’ ஊடகம் உட்பட பலரும் “இரு சுவர்களுக்கு இடையே பிடிமானம் இல்லாமல் ஏறிய நடிகர் விஜய் தேவரகொண்டா” என்று கூறி சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், இரு சுவர்களுக்கு இடையே பிடிமானம் இல்லாமல் ஏறிய நடிகர் விஜய் தேவரகொண்டா என்று பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.