YouTurn

உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !

உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை . இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.



Facebook link 

விரிவான விளக்கம்

மே 20-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படத்தை பார்த்த ஊடகவியலாளர் செந்தில்வேல், உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்ப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாக இந்த ட்வீட் ஸ்க்ரீன்சார்ட் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் ட்வீட் பதிவு குறித்து தேடுகையில், அது ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் அப்பதிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.



இந்த போலியான ட்விட்டர் பக்கத்தில் மே 20-ம் தேதி," பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை . இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .. இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைக்காவியமாக நெஞ்சுக்கு நீதி இருக்கும், உலகளில் பல்வேறு விருதுகளை உறுதியாக வெல்லும்" எனப் பதிவாகி இருக்கிறது. 



Archive link 

senthilvel79 எனும் ஐடி-யில் இயங்கும் ட்விட்டர் பக்கமே செந்தில்வேலின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம். இதற்கு முன்பாகவும், செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் பல ட்வீட் பதிவகளை செந்தில்வேல் வெளியிட்டதாக விமர்சித்து வைரல் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க : ஸ்டாலின் ஆட்சியின் கீழ் இலங்கை வர வேண்டும் எனக் கூறியதாக செந்தில் வேல் பெயரில் போலி ட்வீட் !

முடிவு : 

நம் தேடலில், பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை, இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது எனக் கூறியதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் வைரலாகும் ட்வீட் போலியான ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியானது என அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க