யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீப காலங்களாக பெரியார் எனும் பெயரை சமூக வலைதளங்களில் ஆதரித்தோ, வசைபாடியோ பதிவிடுவதை பார்க்காதவர்களே இல்லை. தமிழகத்தில் மாற்று அரசியல், எதிர் அரசியல் என வருபவர்கள் பெரியாரை விமர்சித்து பேசுவதையே முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலரும் அறிந்தது. இதற்காக பெரியார் தொடர்பாக தவறான...
பரவிய செய்தி
பொண்டாட்டிக்கு தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனம்னு சொல்லி.. மகளுக்கு தாலி கட்டிய மகான் தான் நம்ப பெரியார்...
Facebook link | archived link

Facebook link | archived link
விரிவான விளக்கம்
சமீப காலங்களாக பெரியார் எனும் பெயரை சமூக வலைதளங்களில் ஆதரித்தோ, வசைபாடியோ பதிவிடுவதை பார்க்காதவர்களே இல்லை. தமிழகத்தில் மாற்று அரசியல், எதிர் அரசியல் என வருபவர்கள் பெரியாரை விமர்சித்து பேசுவதையே முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலரும் அறிந்தது. இதற்காக பெரியார் தொடர்பாக தவறான புகைப்படங்கள், கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

பாஜக ஆதரவாளர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் பதிவான ஸ்க்ரீன்சார்ட்டில் " பொண்டாட்டிக்கு தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனம்னு சொல்லி.. மகளுக்கு தாலி கட்டிய மகான் தான் நம்ப பெரியார்..." என்பதுடன் பெரியார் அமர்ந்து இருக்கும் பொழுது அருகே ஒரு பெண் மாலையுடன் இருக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்ட பதிவு ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பெரியார் திருமணம் குறித்தும், வைரலாகும் புகைப்படம் குறித்து தொடர்ந்த படிக்கவும்.
பல ஆண்டுகளாக பெரியார் மீது தொடர்ந்து முன்வைக்கப்படும் விமர்சனம், பெரியார் தன் வயதில் பாதியைக் கொண்ட மணியம்மையை திருமணம் செய்து கொண்டது. சிலர் 70 வயதான பெரியார் தத்தெடுத்து வளர்த்து வந்த 16 வயது மகளான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் என்று தவறாக கூறி வருகின்றனர்.

1949-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பெரியாருக்கும், மணியம்மைக்கும் திருமணம் நடைபெற்றதாக விடுதலை நாளிதழில் கூறப்பட்டுள்ளது. அப்போழுது பெரியாருக்கு 70-ஐ கடந்து இருந்தது, மணியம்மைக்கு 29 வயதாகி இருந்தது, மணியம்மை 1920-ம் ஆண்டில் பிறந்தவர்.
அன்றைய காலக்கட்டத்தில், ஒரு பெண்ணை தத்தெடுக்கும் உரிமையும் கிடையாது, தத்துப்போகும் உரிமையும் கிடையாது. சட்டப்படி மகளாக தத்தெடுக்க முடியாத காரணத்தினால், தனக்கு பின்னால் தன்னுடைய கழகத்தையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க மணியம்மையை பெரியார் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால், தத்தெடுத்து வளர்த்து வந்த மகளை பெரியார் திருமணம் செய்து கொண்டதாக தவறான பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. பெரியாரின் இறப்பிற்கு பிறகு மணியம்மை கழகத்தின் தலைவியாக இருந்து வந்தார்.
பெரியார் மற்றும் மணியம்மை திருமணம் செய்து கொண்ட பொழுது மணியம்மை 16 வயதுடைய சிறுமி அல்ல , 29 வயதை கடந்தவர் என அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல், பெரியார் மணியம்மைக்கு தாலி கட்டிய பொழுது எடுக்கப்பட்ட படம் என வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், அந்த புகைப்படத்தின் முழுமையான படமானது நமக்கு கிடைத்தது.

அந்த புகைப்படத்தில் இருப்பது மணியம்மை அல்ல. கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரியார் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமாகும். பெரியார் அமர்ந்து இருக்க இருவருக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்படுவது இடம்பெற்று இருக்கிறது. மேலும், அந்த மேடையில் அண்ணாவும், வீரமணி ஆகியோர் இருப்பதையும் காணலாம்.

இந்த புகைப்படத்தில் இருந்து, திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் பெரியாரின் முகம் தெரியும் அளவிற்கு கட் செய்து பெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.