YouTurn

மருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது ?

மருத்துவர்களை தாக்கும் மக்களின் வைரல் வீடியோ| எங்கு நடந்தது ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

வைரலாகும் வீடியோவில், " பாதுகாப்பு கவச உடைகள் அணிந்தவர்களை விரட்டியபடியே வரும் மக்கள் கற்களை கொண்டும், கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டும் அடித்து துரத்தும் காட்சி பதிவாகி இருக்கிறது. இச்சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்ததாக பரவுகிறது. ஆனால், இந்த வீடியோ மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில்...

பரவிய செய்தி

கொரோனா நோய் தொற்றால் ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உறவினர் மருத்துவர்களை தாக்குகிறார்கள். இது தவறான முன் உதாரணம். கண்டனங்கள்.

Facebook link | archived link 

விரிவான விளக்கம்

வைரலாகும் வீடியோவில், " பாதுகாப்பு கவச உடைகள் அணிந்தவர்களை விரட்டியபடியே வரும் மக்கள் கற்களை கொண்டும், கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டும் அடித்து துரத்தும் காட்சி பதிவாகி இருக்கிறது. இச்சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்ததாக பரவுகிறது. ஆனால், இந்த வீடியோ மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் எடுக்கப்பட்டது".



Facebook archived link

இந்தூரில் உள்ள தாட் பட்டி பாகால் பகுதி நோவல் கொரோனா வைரசின் முக்கிய இடமாக அறிவிக்கப்பட்டு, 54 குடும்பங்களுக்கு மேலே தனிப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு கண்காணிப்பிற்கு சென்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகளை அப்பகுதியில் இருந்த மக்கள் கற்களை கொண்டு தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.



" கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை கண்காணிக்க சென்ற இடத்தில் கும்பலாக வந்த மக்கள் தாக்கியதில் இரு பெண் மருத்துவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசார் மீட்டுள்ளனர் ".



மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதற்கு சில நாட்களுக்கு முன்பாகதான், நோவல் கொரோனா வைரசால் நோயாளி இறந்த பிறகு ஹைதராபாத் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. அங்குள்ள மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற தெலங்கானா மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இதேபோல், குஜராத் சூரத் பகுதியில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பதிவாகி இருக்கிறது. மருத்துவ பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன.

ஹைதராபாத் பகுதியில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உண்மை என்றாலும், வைரலாகும் வீடியோ மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் எடுக்கப்பட்டது.

சுருக்கமாக

சுகாதார பணியாளர்கள், மருத்துவர்களை மக்கள் தாக்கும் சம்பவம் நிகழ்ந்ததாக வைரலாகும் வீடியோ மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஹைதராபாத் பகுதியிலும் நிகழ்ந்து இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…