யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அதிகாரிக்கு சிலை வைக்கிறது திமுக அரசு. சிலை வைக்கும் அளவுக்கு பென்னி குயிக் இந்துக்களுக்கு செய்த நன்மை என்ன? - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி 
X link | Archive link

X link | Archive link
விரிவான விளக்கம்
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்துவரும் பெரியாறு அணையைக் கட்டியவர் பிரிட்டன் பொறியாளர் பென்னி குவிக். தொடக்கத்தில் அணை கட்ட நிதி ஒதுக்கிய பிரிட்டன் அரசு, ஒரு கட்டத்தில் நிதி அளிப்பதை நிறுத்தியது. ஆனால், பென்னி குவிக் தனது சொந்த பணத்தில் அணையைக் கட்டி முடித்தார். அவரது இச்செயலால் தமிழ்நாடு மக்கள் இன்றளவும் அவரை போற்றுகின்றனர்.
இந்நிலையில், பென்னி குவிக் இந்துக்களுக்கு என்ன நன்மை செய்தார் எனத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாகக் 'கதிர்' பக்கம் பெயரில் நியூஸ் ஒன்று பரப்பப்படுகிறது. இதனை திமுக ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர் சூர்யா சேவியர் எனப் பலரும் பரப்புகின்றனர்.
உண்மை என்ன ?
பரப்பப்படுகிற நியூஸ் கார்டில் ‘16.01.2022’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் ‘கதிர்’ சமூக வலைத்தளத்தில் அப்படி எந்த நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை. அண்ணாமலை அப்படிப் பேசியதாக எந்த ஊடகத்திலும் செய்தியும் வெளியாகவில்லை.
2022, ஜனவரி 13ம் தேதி அண்ணாமலை பொங்கல் வாழ்த்து சொன்ன நியூஸ் கார்டு மட்டுமே கதிர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த கார்டினை எடிட் செய்து பென்னி குவிக் பற்றி அண்ணாமலை தவறாகப் பேசியதாகப் பரப்பப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் லண்டனில் பென்னி குவிக்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே பென்னி குவிக்கிற்கு எதற்குச் சிலை என அண்ணாமலை பேசியதாக ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது.
மேலும் பரவக் கூடிய நியூஸ் கார்டு போலியானது எனக் கதிர் தங்களது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.
மேலும் படிக்க : கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்வோம் என அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டுகள் !
மேலும் படிக்க : அண்ணாமலை மேரி மாதாவை வணங்கிய படத்தில் காமராஜர் சிலையை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர் !
முடிவு:
நம் தேடலில், பென்னி குவிக் இந்துக்களுக்கு என்ன நன்மை செய்தார் என அண்ணாமலை பேசியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த நியூஸ் கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
உன் கூட்டணியிலுள்ள
பெரியகுளம் ஓபிஎஸ்ஸிடம் கேளு.
விளக்கமாச் சொல்லுவாரு.
தேனியில் போய் தெருதெருவாப் பேசு.
விளக்கம் வராது.
வெளக்கமாறு வரும். pic.twitter.com/6Iv6TvVIeE
— surya xavier (@suryaxavier1) January 18, 2024