YouTurn

படேல் சிலையில் விரிசலா ?

படேல் சிலையில் விரிசலா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குஜராத்தில் 2,900 கோடி ரூபாயில் அக்டோபர் 31-ம் தேதி திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவை உண்மை அல்ல. “ Statue of Unity “ சிலையில் சமீபத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறி வெள்ளை நிறத்தில்...

பரவிய செய்தி

3000 கோடி செலவில் உருவான படேல் சிலையில் விரிசல்.

விரிவான விளக்கம்

குஜராத்தில் 2,900 கோடி ரூபாயில் அக்டோபர் 31-ம் தேதி திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவை உண்மை அல்ல.

“ Statue of Unity “ சிலையில் சமீபத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறி வெள்ளை நிறத்தில் இருக்கும் கோடுகளை வட்டமிட்டு குறிபிட்டு உள்ளனர்.



படேல் சிலை வெண்கல உலோகத் தகடுகளைக் கொண்டு உருவாக்கி உள்ளனர். அதில், ஆயிரக்கணக்கான வெண்கல தகடுகளை ஒன்றோடொன்று இணைத்தே படேல் உருவத்தை அமைத்து இருப்பர். உலோகத் தகடுகளை இணைப்பதற்கு புதுவிதமான வெல்டிங் முறை கையாளப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர்.



வெள்ளை நிறத்தில் விரிசல் போன்று சமீபத்தில் தான் தெரிகிறது என்கிறார்கள். ஆனால், அக்டோபர் 31-ம் தேதி படேல் சிலை திறந்த நாளன்று india today social எடுத்த நேரடிக் காட்சிகளில் சிலையில் வெள்ளை நிறத்தில் கோடுகள் இருப்பதை காணலாம். சமீபத்தில் பரவும் படங்களும், வீடியோவில் இருப்பதும் ஒன்றே என்பதை நிரூபிக்க வீடியோ ஆதாரமே போதுமானது.

தனித்தனியான பகுதிகளை இணைக்கும் பொழுது கற்களுக்கு சிமென்ட், உலோகங்களுக்கு வெல்டிங் போன்ற வேலைபாடுகள் நிச்சயம் இருக்கம்.



கன்னியாக்குமரி கடலில் அமைந்து இருக்கும் வள்ளுவரின் சிலையை அருகில் பார்த்தால், இரு பகுதிகளை இணைக்க ஒருவகையான கலவையை பூசியதால் வெள்ளை நிறத்தில் தெரிவதை காணலாம்.

அவ்வாறான முறையே படேல் சிலையிலும் நடைபெற்று உள்ளது. சிலையில் விரிசல் என எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆகையால், படேல் சிலையில் விரிசல் என்ற வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.

சுருக்கமாக

சமூக வலைத்தளங்களில் வைரலாகுவது போன்று படேல் சிலையில் விரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை. வெண்கல உலோகத் தகடுகளை ஒன்றோடொன்று இணைக்க வெல்டிங் செய்ததால் தெரியும் வெள்ளை நிறமே அவை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.