யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவை என விளம்பரங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பதஞ்சலி நிறுவன பொருட்கள் மீது பல ஆண்டுகளாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு பதஞ்சலி தயாரிப்புகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பதஞ்சலி பொருட்கள் தரமற்றவை அவற்றை...
பரவிய செய்தி
பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில் கெமிக்கல் கலந்துள்ளதால் கத்தார் நாட்டில் விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலேயே தடை செய்து விட்டனர் சொந்த நாட்டில் தடை ஏதுமில்லாமல் விற்பனை செய்து வருகின்றனர்.
விரிவான விளக்கம்
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவை என விளம்பரங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பதஞ்சலி நிறுவன பொருட்கள் மீது பல ஆண்டுகளாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு பதஞ்சலி தயாரிப்புகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

பதஞ்சலி பொருட்கள் தரமற்றவை அவற்றை பயன்படுத்தாதீர்கள் பல நாடுகளில் தடை செய்து விட்டனர் என வெளியாகவும் தகவல்களை அனைவருமே கண்டிருப்போம். குறிப்பாக, கத்தார் நாட்டில் பதஞ்சலியின் தயாரிப்பு பொருட்களில் கெமிக்கல் குறிப்பிட்ட அளவை விட அதிகம் உள்ளதால் தடை விதிக்கப்பட்டது என வெளியாகி வருகிறது.
இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்த அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ்.கே.திஜரவலா, “கத்தார் நாட்டில் பதஞ்சலி தயாரிப்புகள் தடை செய்யப்பட்டதாக கூறுவது தவறு. அது கற்பனையான ஒன்று.

ஹலால் சான்றிதழ் வழங்கியதை அடுத்து கத்தார் நாட்டில் பதஞ்சலியின் அனைத்து தயாரிப்புகளையும் இறக்குமதி செய்ய கத்தார் சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது “ என குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் எஸ்.கே.திஜரவலா பதஞ்சலி நிறுவனத்திற்கு கத்தார் நாட்டில் வழங்கப்பட்ட என்.ஒ.சி சான்றிதழ், அதன் ஆங்கில மொழியாக்கம், ஹலால் பதிவு செய்த சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை இணைத்துள்ளார்.
கத்தார் நாட்டில் பதஞ்சலி தயாரிப்புகளை தடை விதிக்கவில்லை என்று கூறிவிட முடியாது. பதஞ்சலி நிறுவனத்தின் அனைத்து உணவு பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது கத்தரின் Ministry of public health. இந்த தடை மே மாதம் 2018 வரை இருந்துள்ளது. அதற்கு காரணம் ஹலால் விதிமுறைக்கு இணக்கமில்லை எனக் கூறி விற்பனைக்கு தடை விதித்தனர்.

கத்தாரில் பதஞ்சலியின் உணவு பொருட்களை விற்பனை செய்ய ஹலால் அனுமதி வழங்காத காரணத்தினால் மட்டுமே தடை விதிக்கபட்டது. கெமிக்கல் அளவு அதிகம் இருந்ததால் தடை விதிக்கவில்லை. எதுவாயினும், பதஞ்சலி தயாரிப்புகளின் மீது இருக்கும் சந்தேகங்கள் மக்களிடத்தில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

சுருக்கமாக
கத்தார் நாட்டில் பதஞ்சலி தயாரிப்புகள் தடை செய்யப்பட்டதாக தவறாகவும், கற்பனையாகவும் செய்திகள் பரவுவதாக அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
எனினும், மே 2018-ல் ஹலால் தொடர்பாக காரணங்கள் குறிப்பிட்டு பதஞ்சலியின் உணவு பொருட்களுக்கு தடை விதித்தது கத்தாரின் Ministry of public health என்பது குறிப்பிடத்தக்கது. கெமிக்கல் அதிகம் கலந்ததால் அல்ல.