YouTurn

Kimbho app மூலம் ஆப்பு வைத்து கொண்ட பாபா ராம்தேவ்..!

Kimbho app மூலம் ஆப்பு வைத்து கொண்ட பாபா ராம்தேவ்..!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாபா ராம்தேவ் யோகா குரு என்ற பெயரில் இந்திய மக்களுக்கு ஆயுர்வேதத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது அவரின் பதஞ்சலி நிறுவனம். கடந்த சில ஆண்டுகளில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களின் விளம்பரமும், விற்பனையும் அதிகரிப்பதை நம்மால் காண முடிகிறது. மே 30-ம் தேதி பதஞ்சலி நிறுவனத்தால்...

பரவிய செய்தி

இந்தியாவில் பதஞ்சலி நிறுவனத்தால் உருவாக்கிய kimbho app வெளியான சில மணி நேரங்களில் கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து மாயம் . அமெரிக்க நிறுவனத்தின் bolo messenger செயலியை மாற்றியமைத்து kimbho app உருவாக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

பாபா ராம்தேவ் யோகா குரு என்ற பெயரில் இந்திய மக்களுக்கு ஆயுர்வேதத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது அவரின் பதஞ்சலி நிறுவனம். கடந்த சில ஆண்டுகளில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களின் விளம்பரமும், விற்பனையும் அதிகரிப்பதை நம்மால் காண முடிகிறது.



மே 30-ம் தேதி பதஞ்சலி நிறுவனத்தால் வாட்ஸ் ஆஃப்-க்கு சவால் விடும் அளவிற்கு மெசேஜ் ஆஃப் ஒன்றை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்த மெசேஜ் ஆஃப்-க்கு “ kimbho “ என பெயரிட்டுள்ளனர். இதை பதஞ்சலியின் செய்தித்தொடர்பாளர் திஜரவலா தனது ட்விட்டர் கணக்கில் இந்த ஆஃப் வாட்ஸ் ஆஃப்பிற்கு சவாலாக இருக்கும், இதற்கு டாக்லைன் ஆக “ Now India will speak “ என்று கூறியுள்ளார். kimbho app இந்தியாவின் ப்ரண்ட் ஆக இருக்கும் என்றே இதை வெளியிட்டனர்.



ஆனால், வெளியிட்ட சில மணி நேரத்திலேயே சோசியல் மீடியாவில் பாபா ராம்தேவ் bolo messenger App-ஐ “ kimbho app “ என்ற பெயரில் மறுவர்த்தகம் செய்வதாக கூறி பதிவிட ஆரம்பித்தனர். காரணம், bolo chat-ல் இருந்த மெசேஜ் செய்யும் வடிவமைப்பு, ஸ்டிக்கர்ஸ் போன்ற படங்கள் என அனைத்தும் ஒரே மாதிரியாக kimbho app-ல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



“ bolo messenger ” App அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Fremont என்ற இடத்தில் develop செய்யப்பட்டது. இந்த மெசேஜ் ஆஃப் 2015 டிசம்பர் 18-ம் தேதி முதல் முறையாக தொடங்கப்பட்டது".

Kimbho chat ஆஃப்பை கூகுள் playstore-ல் download செய்து install செய்த பிறகு நீங்கள் கொடுக்கும் எண்ணிற்கு OTP வரும். அதில் bolo என்ற பெயர் நீக்கப்படாமல் உள்ளது என்று screen sort எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Bolo chat ஆஃப்பிற்கு கீழே Patanjali communication என்று பெயர் இடம்பெற்றுள்ளது. ஆக, அமெரிக்காவில் develop செய்யப்பட்ட ஆஃப்பை இந்தியாவின் புதிய தொடக்கம் என்றுக் கூறி பொய்யான கூற்றை தெரிவித்துள்ளனர்.



அதுமட்டுமின்றி, kimbho பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இந்த மெசேஜ் ஆஃப் பற்றி அறிவிப்பு வெளியிட்டதில் இடம்பெற்ற படங்களில் bolo என்ற பெயர் மாறாமல் உள்ளது. இத்தனை வேலைகளை செய்து ஆஃப்பை மாற்றிய பதஞ்சலி bolo chat-ன் பெயரை நீக்காமல் மாட்டிக் கொண்டனர்.

அமெரிக்காவில் develop செய்யப்பட்ட ஒரு ஆஃப்பை இந்தியாவில் வெளியிட்டது தவறில்லை. ஆனால், இது இந்தியாவின் தயாரிப்பு , வாட்ஸ் ஆஃப்-க்கு சவாலாக இருக்கும் என்றெல்லாம் வீண் விளம்பரம் செய்து அவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டியுள்ளனர்.

சுருக்கமாக

இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அமெரிக்க bolo messenger App-ஐ kimbho app என்று மாற்றி இந்திய தயாரிப்பு என்றப் பெயரில் வெளியிட்டதை சில மணி நேரங்களிலே கண்டறிப்பட்டுள்ளது. Trial version செயலி தான் வெளியிட்டோம் ஜுன் 21 கிம்போ செயலியை வெளியிடுவோம் என பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க