யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 158 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட , மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ் முண்டே பார்லி தொகுதியில் தோல்வியை தழுவினார். பங்கஜ் முண்டே...
பரவிய செய்தி
நெருங்கிய உறவினரிடம் தோல்வி.. உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுத்த மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பங்கஜ் முண்டே.
விரிவான விளக்கம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 158 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட , மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ் முண்டே பார்லி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
பங்கஜ் முண்டே மகாராஷ்டிரா மாநில அரசின் பாஜக அமைச்சராக இருந்தவர் . ஆனால், இந்த தேர்தலில் பார்லி தொகுதியில் தன்னை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தனஞ்ஜெய் முண்டேவிடம் தோல்வியை சந்தித்தார். தன் நெருங்கிய உறவினரான தனஞ்ஜெய் முண்டேவிடம் தோல்வியை சந்தித்ததால் கதறி அழுததாக புகைப்படங்கள் ஊடக செய்திகளில் வெளியாகியது.

IANS, NDTV உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், தேர்தல் தோல்வியால் பங்கஜ் முண்டே கதறி அழுவதாக செய்திகளை முதலில் வெளியிட்டன.ஆனால், அந்த செய்திகளை பிறகு நீக்கியுள்ளார்கள். இதேபோல், நியூஸ்18 தமிழ் செய்தி பிரிவிலும் பங்கஜ் முண்டே தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தினால் அழுத்ததாக செய்திகளை வெளியிட்டனர்.

News18 archived link

ஆனால், நியூஸ்18 வெளியிட்ட செய்தி நீக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக, பங்கஜ் முண்டே தோல்வியால் கதறி அழுவதாக தவறான செய்திகள் பரவி வருவதாக நியூஸ்18 தமிழ் செய்தியை வெளியிட்டு உள்ளது.

News18 tamil changed news archived link
தன்னுடைய தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் பாஜக அமைச்சர் பங்கஜ் முண்டே கதறி அழுவதாக முன்னணி செய்தி ஊடகங்களே தவறான செய்திகளை வெளியிட்டு, பின்பு நீக்கி உள்ளன. மேலும், பங்கஜ் முண்டே அழுவதாக காண்பிக்கும் புகைப்படம் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வெளியான வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டன.
TV9 Marathi video archived link
மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே TV9 மராத்தி என்ற செய்தி சேனலில் அக்டோபர் 20-ம் தேதி பங்கஜ் முண்டே அளித்த பேட்டியில், 1.40 நிமிடத்தில் பல விதமான முகபாவனைகளை காண்பிக்கிறார். அந்த வீடியோ முழுவதிலும் பங்கஜ் முண்டே அழவில்லை. தன் மன வேதனையை வெளிப்படுத்துவது போன்று முகபாவனையை வைத்துள்ளார். அந்த புகைப்படத்தையே TV9 மராத்தி செய்தி வீடியோவின் Thumbnail புகைப்படமாக வைத்து உள்ளனர்.

அக்டோபர் 20-ம் தேதி பங்கஜ் முண்டே பேட்டி அளித்த போது இடம்பெற்ற காட்சியை அக்டோபர் 24-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிய போது தோல்வியால் கதறி அழுவதாக தவறான செய்திகளை முன்னணி ஊடகங்களே வெளியிட்டு இருக்கின்றன. பின்னர் அதை நீக்கி உள்ளனர்.