
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X link | Archive link
விரிவான விளக்கம்
@nsitharaman @annamalai_k@actorvijay @jsaideepak
சென்னை பள்ளிகரணையில் பெருமாள் கோவில் சுற்று சுவரை இடித்து பாதை அமைக்கும் பணி திமுக தலைவரின் 40 ஏக்கர் நிலத்திற்கு செல்ல கோயில் சொத்து சூறையாட படுகிறது
இப்படியே விட்டால் நம் தெய்வம் கோயில்களே இல்லாமல் போய்விடும் . pic.twitter.com/koq8uPy5Sl
— HinduPhile (@rajasigamani) February 3, 2024
Archive link
அதற்கும் முன்னதாக 2022 நவம்பர் மாதம் இந்த வீடியோ குறித்து குமுதம் பேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி கோயிலை அரசு இடிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோயிலை இடிப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதில் உள்ளது.
உண்மை என்ன ?
வீடியோவில் உள்ள சம்பவம் குறித்துத் தேடியதில், அக்கோயில் தனியாரால் நிர்வாகம் செய்து வரும் நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் என்பதும், அந்த வாக்குவாதம் கோயில் சீரமைப்பு பணியின் போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை என்பதும் அறிய முடிந்தது.
இது நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 2022ம் ஆண்டு நடந்தது. இக்கோயில் ’அர்த்தநாரீஸ்வரர் ஆலய பக்த சமாஜம்’ என்னும் டிரஸ்ட் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. இக்கோயிலுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கோ, தமிழ்நாடு அரசுக்கோ எந்த தொடர்பும் இல்லை.
2022ம் ஆண்டு இந்த வீடியோ பரவிய போது, அமைச்சரும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் மற்றும் அக்கோயில் டிரஸ்ட் உறுப்பினர்கள் பேசிய விளக்க வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “அர்த்தநாரீஸ்வரர் ஆலய பக்த சமாஜம் டிரஸ்ட் மூலம் கடந்த 60 ஆண்டுகளாக அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சாலை உயரமும் ஆலய உயரமும் ஒன்று போல் உள்ளதினால் தரை மட்டத்தில் இருந்து சுமார் ஒன்றே முக்கால் அடி உயரம் உயர்த்த பிரகாரத்தில் உள்ள சன்னதிகள் இடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க எங்களது டிரஸ்டினால் நிர்வகிக்கப்படும் கோயிலில் பக்தர்களுக்குத் தகுந்த அறிவிப்பு கொடுத்துச் செய்து வருகிறோம். ஆனால், சில ஊடகங்கள் மற்றும் யூடியூப்களில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு அரசினால் கோயில் இடிக்கப்பட்டது. கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது என்பது போன்ற செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது” என கூறியுள்ளனர்.
[video width="1280" height="720" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/02/GBVwYhlbjJVvkE8BAIU9ySbh8_cXbmdjAAAF.mp4"][/video]
அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு அருகில் பனச்சியம்மன் கோயில் குளம் உள்ளது. மழை காரணமாகக் குளம் நிரம்பி அர்த்தநாரீஸ்வரர் கோயிலுள்ளே நீர் வந்துள்ளது. இதனைச் சரி செய்யும் விதமாகக் கோயில் நிர்வாகம் இந்த புனரமைப்பு பணியினை மேற்கொண்டுள்ளது.
மேலும் இது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “தனியாரால் நிர்வகிக்கப்படும் அக்கோயில் உள்ளே சிலர் தனிக் குழுவாகச் சேர்ந்து திருமூலநாதர் என்கிற சிவனை உருவாக்கி வணங்குகின்றனர். இதற்கிடையில் கோயில் பள்ளத்தில் இருப்பதினால் மழைக் காலங்களில் மழை நீர் உள்ளே வருகிறது. எனவே பிரகாரத்தில் உள்ள கோயில்களை இடித்துவிட்டு உயர்த்தி கட்ட முடிவெடுத்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்குள்ளே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் திமுக ஆட்சிக்குக் கேட்ட பெயர் ஏற்படுத்த திமுக இந்து கோயில்களை இடிக்கிறது எனப் புகைப்படங்கள் பரப்பப்பட்டது. இது முற்றிலும் தவறானது. இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இவற்றில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் கோயில் தனியாரால் நிர்வகிப்பதும் அது இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை என்பதும் அறிய முடிகிறது. மேலும் இந்த இடம் புறம்போக்கு இடம் என்பதால் அரசு கோயிலை இடித்ததாகக் குமுதம் வெளியிட்ட செய்தியும் தவறானது.
மேற்கொண்டு பள்ளிக்கரணை கோயில் குறித்தும் தேடினோம். பள்ளிக்கரணை லட்சுமி நாராயண பெருமாள் கோவில் நிர்வாகம் அனுமதியின்றி சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாகவும், திமுக தலைவரின் நிலத்திற்குச் செல்லவே சுற்று சுவர் இடித்து வழித்தடம் அமைக்கப்படுவதாகவும் 2022 நவம்பர் மாதம் செய்திகள் பரவியுள்ளது.
அப்போதே இது பற்றி பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், “பள்ளிக்கரணை அணை ஏரி நிரம்பினால், உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்கும் வகையில், ஏரியில் இருந்து போக்கு கால்வாய் அமைக்கப்படுகிறது.

ஏரியில் இருந்து ஆதிமூலம் நகர் சாலை வழியாக கால்வாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால், ஏரியை அடுத்துள்ள தனியார் பட்டா நிலம் மற்றும் கோவில் நிலத்தின் வழியாக போக்கு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி மனு அனுப்பப்பட்டது. கோவிலுக்கு தரைவாடகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரை அருகில் உள்ள பட்டா நிலத்தின் உரிமையாளரிடமும் அனுமதி பெறப்பட்டுவிட்டது” எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது உரிய அனுமதி பெற்ற பிறகுதான் பொதுப்பணித்துறை பணியினை மேற்கொண்டுள்ளது.
இப்படி வெவ்வேறு சம்பவத்தையும் வீடியோவையும் சேர்த்துப் பொய் செய்திகள் பரப்பப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், பள்ளிக்கரணை லட்சுமி நாராயணன் கோயில் மற்றும் நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் குறித்துப் பரப்பப்படும் செய்திகள் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.