YouTurn

பாலஸ்தீனர்கள் போரில் காயம் அடைந்தது போல நாடகம் ஆடுவதாகத் தவறாகப் பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !

பாலஸ்தீனர்கள் போரில் காயம் அடைந்தது போல நாடகம் ஆடுவதாகத் தவறாகப் பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அனுதாப நாடகத்திற்கு தயாராகுறானுங்க

X post link 

விரிவான விளக்கம்

ஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடந்து வரும் சூழலில் அப்பகுதியில் எடுக்கப்பட்டதாகப் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பாலஸ்தீனர்கள் காயம் அடைந்தது போல அலங்காரம் செய்து போலியாக வீடியோ எடுத்து அனுதாப நாடகம் நடத்துகின்றனர் என வீடியோ ஒன்றினை பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் TRT World’ எனும் யூடியூப் சேனலில் உள்ள வீடியோ ஒன்றினை காண்பித்தது. TRT என்பது துருக்கிய பொது ஒலிபரப்பு சேவையாகும். 

2 நிமிடம் 15 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ 2017, மார்ச் 2ம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் நெறியாளர் “காசா பகுதியில் அதிக திரைப்பட தயாரிப்புகள் இல்லை. ஆனால், அது ஒப்பனை கலைஞரான மரியம் சாலாவை தனது கனவைப் பின்பற்றுவதைத் தடுக்கவில்லை. ஆண்களால் பாரம்பரியமாக நடத்தப்படும் வணிகத்தில் நுழையும் பாலஸ்தீனிய திரைப்படங்களுக்குப் போலி இரத்தத்தை உருவாக்கக் கற்றுக்கொண்டார். 



காசாவை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மரியம் சலா, பிரெஞ்சு மருத்துவ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகர்கள் மீது கடுமையான காயங்கள் இருப்பது போன்று மேக்அப் செய்கிறார். காசா பகுதி மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை உலகிற்கு தெரிவிக்க அவர்கள் இவ்வாறு உருவாக்குகிறார்கள்” என்று கூறுகிறார்.

மரியம் சலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்ததில் இது போன்று பல விதமான காயங்களைத் தனது மேக்கப் கலை மூலம் உருவாக்கியுள்ளதைக் காண முடிந்தது. 

பரவக் கூடிய வீடியோ ஒப்பனை கலைஞர் மரியம் சாலாவும் அவரது குழுவினரும் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ‘டாக்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ ஆகியோர் திட்டத்தில் பங்கேற்கும் நடிகர்களுக்கு போலியான காயங்களை மேக்அப் மூலம் உருவாக்கியபோது எடுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.



மேலும், முழு வீடியோவில் இருப்பவர்களின் டீ ஷர்ட்டுக்கு பின்னால் "Médecins du Monde" என்ற (பிரெஞ்ச்) லோகோ இருப்பதைக் காணலாம். அப்படி என்றால் "உலக மருத்துவர்கள்" என்று பொருள். அதேபோல் வீடியோவில் உள்ள பேனரில் ‘Simulation’ (உருவாக்கப்படுதல்) என்று குறிப்பிடப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.



இவற்றிலிருந்து மருத்துவ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செய்யப்பட்ட ஒரு விழிப்புணர்வு வீடியோவினை, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடைபெறும் போருடன் ஒப்பிட்டு தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் குழந்தையை கொல்வது போல் போலியான வீடியோ எடுப்பதாகப் பரவும் பழைய குறும்பட வீடியோ !

இதேபோல் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போருடன் தொடர்புப்படுத்தி பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகிறது. அவை குறித்த உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ஹமாஸ் அமைப்பினர் பாராகிளைடரில் இஸ்ரேலுக்குள் நுழையும் போது மின்கம்பியில் சிக்கியதாகப் பரவும் தென்கொரியா வீடியோ!

முடிவு : 

நம் தேடலில், பாலஸ்தீனர்கள் காயம் ஏற்பட்டது போல் போலியாகச் சித்தரித்து அனுதாபம் தேடுகின்றனர் எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2017ம் ஆண்டு மருத்துவ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க