YouTurn

பாகிஸ்தான் வீராங்கனையை வென்ற தமிழ் பெண் என தவறாக பரவும் பழைய CWE வீடியோ !

பாகிஸ்தான் வீராங்கனையை வென்ற தமிழ் பெண் என தவறாக பரவும் பழைய CWE வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாகிஸ்தானைச் சார்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மும்பையில் நடைபெற்ற போட்டியில் வென்ற வீராப்பில் என்னை வெல்ல இந்தியாவில் எவரும் இல்லை என கர்ஜித்த போது கூட்டத்தின் நடுவே இருந்த தூத்துக்குடியை சார்ந்த இளம் பெண் துணிச்சலுடன் மேடை ஏறி எதிர்கொண்ட காட்சி.



Facebook link | archive link

விரிவான விளக்கம்

பாகிஸ்தான் நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் மும்பையில் நடைபெற்ற போட்டியில் வென்ற பிறகு தன்னை எதிர்க்க எவருமில்லை எனப் பேசியுள்ளார், அப்போது கூட்டத்தின் நடுவே இருந்த இளம்பெண் ஒருவர் மேடையேறி அவரை எதிர்கொண்ட காட்சி எனக் கூறி இவ்வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Facebook link | archive link1| archive link2





ஒவ்வொரு பதிவிலும் பாகிஸ்தான் வீராங்கனையை எதிர்கொண்ட பெண் சென்னை, தூத்துக்குடி, மதுரை, காரைக்குடி, ஈரோடு, புதுக்கோட்டை என பல ஊர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ கடந்த 2018-ம் ஆண்டு முதலே சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் 2.10 நிமிட வீடியோவில் இடம்பெற்று இருப்பது குத்துச்சண்டை போட்டியல்ல, " CWE " என அழைக்கப்படும் இந்திய தொழில்முறை மல்யுத்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.



2016-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி CWE உடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் " KAVITA‬ accepted the open challenge of BB Bull Bull " எனும் தலைப்பில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது. மல்யுத்த வீராங்கனை பிபி புல் புல் என்பவரை கூட்டத்தில் இருந்து கவிதா என்பவர் எதிர்கொள்வது போன்று காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இது தற்செயலாக நடந்தவை அல்ல, சித்தரிக்கப்பட்டவையே.



இதையடுத்து ஜூலை 9-ம் தேதி வெளியான வீடியோவில், அதே பெண்கள் ஆண் துணையுடன் சண்டையில் பங்கேற்பதைக் காணலாம். வைரலாகும் வீடியோவில் போட்டிக்கு அழைக்கும் பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அல்ல, அவர் இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த பெண்ணான பிபி புல் புல் ஆவார். அவரிடம் சண்டையிடுபவர் பவர் லிபிட்டிங் மற்றும் முன்னாள் எம்எம்ஏ வெற்றியாளரான கவிதா தேவி ஆவார். அவர் Hardkd எனும் புனைப் பெயரில் பங்கேற்கிறார்.



Continental Wrestling Entertainment (CWE) என்பது இந்திய தொழில்முறை மல்யுத்த வீரர்களை உருவாக்கும் பயிற்சி பள்ளியாகும். இது 2015-ம் ஆண்டில் முன்னாள் WWE சூப்பர் ஸ்டார் கிரேட் காளி மூலம் பஞ்சாப்பின் ஜலந்தரில் அமைக்கப்பட்டது. ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி காவலராக பணியாற்றியவர். பின்னர் 2016 பிப்ரவரியில் CWE-ல் இணைந்தார். 2016 ஜூன் மாதம் பிபி புல் புல் உடனான முதல் போட்டியில் பங்கேற்ற பிறகு பிரபலமடைந்தார். WWE-ல் பங்கேற்க 2017-ம் ஆண்டு ஒப்பந்தமாகி போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

மேலும் படிக்க :  கூட்டமாக பூஜை செய்தவர்கள் காவலரை தாக்கியகாக பரவும் தவறான வீடியோ !

இதற்கு முன்பாக, சாமியார் உடன் பூஜை செய்தவர்கள் காவலரைதாக்கியதாக CWE-ல் வெளியான வீடியோ தவறாக பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், மும்பையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை இளம் தமிழ் பெண் துணிச்சலுடன் மேடை ஏறி எதிர்கொண்ட காட்சி என தவறாக பரப்பப்படும் வீடியோவானது 2016-ல் CWE எனும் இந்திய தொழில்முறை மல்யுத்த போட்டியில் எடுக்கப்பட்டது. அது சித்தரிக்கப்பட்ட போட்டியே என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க