யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்தது. ராணுவம் போலீசார் இடையே கடும் மோதல்.

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவாகி உள்ளதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Facebook link | Archive
உண்மை என்ன ?
பாகிஸ்தானில் உள்ள பதற்றமான சூழ்நிலையுடன் தொடர்புப்படுத்தி இந்திய அளவில் பரப்பப்படும் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
புகைப்படம் 1 :

இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி www.independent.co.uk இணையதளத்தில் பாகிஸ்தானின் பேஷ்வார் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 37 உயிரிழந்து உள்ளதாகவும், 75 பேர் காயமடைந்து உள்ளதாக வெளியான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படம் 2 :

ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி நகரில் செல்லும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015 டிசம்பர் 8-ம் தேதி tribune.com.pk செய்தி இணையதளத்தில் " Govt won’t surrender Karachi operation gains " எனும் தலைப்பில் வெளியான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படம் 3 :

அடுத்ததாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2009-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி edition.cnn.com இணையதளத்தில் " Death toll rises in Karachi suicide attack " எனும் தலைப்பில் வெளியான செய்தியுடன் மூன்றாவது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. கராச்சி நகரில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்ந்தது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது.
புகைப்படம் 4 :

இறுதியாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2006-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி Chinadaily.com எனும் இணையதளத்தில் கராச்சியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்தது என பரப்பப்படும் புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாக கராச்சி நகரில் மற்றும் பிற பகுதியில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது எடுக்கப்பட்டவை என அறிய முடிகிறது.