YouTurn

பாகிஸ்தானில் கள்ள நோட்டு அச்சடிக்கும் பகுதியா?| உண்மை என்ன ?

பாகிஸ்தானில் கள்ள நோட்டு அச்சடிக்கும் பகுதியா?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தானில் நாட்டில் குடிசை தொழிலாக இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளதாகவும், அவரின் முயற்சிக்காக இந்த வீடியோவை அதிகம் பகிருமாறு கீழ்காணும் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. Facebook link | archived link உண்மை என்ன ?...

பரவிய செய்தி

பாகிஸ்தானில் குடிசை தொழில்.. pls இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்பவும், இல்லையெனில் இந்த வீடியோவை ரகசியமாக எடுத்த நபருக்கு இந்த பணி வெற்றிகரமாக இருக்காது.

விரிவான விளக்கம்

வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தானில் நாட்டில் குடிசை தொழிலாக இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளதாகவும், அவரின் முயற்சிக்காக இந்த வீடியோவை அதிகம் பகிருமாறு கீழ்காணும் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.



Facebook link | archived link  

உண்மை என்ன ? 

பாகிஸ்தான் நாட்டில் இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சடிப்பதாக பகிரப்படும் வீடியோ உண்மையானது அல்ல. இது போலியானவை என்பதற்கு அந்த வீடியோவிலேயே ஆதாரங்கள் உள்ளன.



வீடியோவில் காண்பிக்கப்பட்டு இருக்கும் ரூபாய் நோட்டு கட்டுகளில் வரிசை எண் இல்லை, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என இல்லை, ஆர்பிஐ சின்னம் இல்லை, கவர்னரின் கையொப்பமில்லை, இந்தியா ரூபாயின் குறியீடு கூட இல்லை.

இத்தகைய ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காகவோ அல்லது சினிமாவில் பயன்படுத்துவதற்காகவோ உருவாக்கப்பட்ட போலியான நோட்டுகள் என அறிந்து கொள்ள முடிகிறது. ஆக, வைரலாகும் வீடியோவில் இருப்பது இந்திய கள்ள நோட்டுகளும் அல்ல, அதை அச்சடிப்பது பாகிஸ்தானும் அல்ல என்பதை தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க : வீடியோவில் இருப்பது பங்களாதேஷில் இயங்கும் கள்ளநோட்டு தொழிற்சாலையா?

இதேபோல், கடந்த 2018-ல் பங்களாதேஷ் நாட்டில் அச்சடிக்கும் தொழிற்சாலையில் இந்திய ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடிக்கும் அதிர்ச்சி வீடியோ என இதே வீடியோவை வைரல் செய்து இருந்தனர். அப்பொழுதே, வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை யூடர்ன் வெளியிட்டு இருந்தோம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…