
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
நான் செய்வதை உங்களால் செய்ய முடியுமா..? என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு
சவால் விட்ட. பாகிஸ்தான்
பேட்ஸ்மேன் #பாபர்அசாம்
பின்னர் தன் உடன் பிறந்த சகோதரியை திருமணம் செய்து கொண்டார்😂... pic.twitter.com/id68Z3i1EE
— ஶ்ரீனிவாசன்🚩 (@Srinivasan790) August 25, 2023
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் அவருடைய சகோதரி அல்ல என்பதையும், சர்வதேச நடுவர் (Umpire) அலீம் தாரின் மருமகளான ஜாரா நயீம் தார் என்பதையும் அறிய முடிகிறது. மேலும் பாபர் அசாமுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தை, ஜாரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜனவரி 3௦ அன்று பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.
மேலும் ஆய்வு செய்ததில், பாபர் ஆசாமின் PR நிர்வாக நிறுவனமான Saya Corporation அவரது திருமணம் குறித்த செய்தி போலியானது என தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
The earth-shattering news of Kaptaan Babar Azam's wedding in November is completely fake. In fact, this is a ‘news’ for even him and his family. Kindly avoid sharing the unverified news. Thank you 🙏
— Saya Corporation (@SayaCorps) August 15, 2023
Twitter link
அப்பதிவை கிரிக்கெட் பதிவை பாபர் அசாமும் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் பரவி வரும் இந்த தகவல்களை பாபர் அசாமின் குடும்பம் மறுத்துள்ளது தொடர்பாக CricketPakistan என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.
மேலும் படிக்க : ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !
முடிவு:
நம் தேடலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை மணந்ததாகப் பரவும் தகவல் தவறானது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் அவருடைய சகோதரி அல்ல என்பதை அறிய முடிகிறது.