YouTurn

பாகிஸ்தானின் சேனலை ஹக் செய்து இந்திய தேசியக் கொடி ஒளிபரப்பு !

பாகிஸ்தானின் சேனலை ஹக் செய்து இந்திய தேசியக் கொடி ஒளிபரப்பு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

பரவிய செய்தி






பாக்கின் டான் டிவி சேனலை ஹேக் செய்து இந்திய கொடியை பறக்கவிட்ட இந்திய ஹேக்கர்கள்






விரிவான விளக்கம்

பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த டவ்ன் சேனலை ஹக் செய்து இந்தியாவின் மூவர்ணக் கொடி உடன் " இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் " என்கிற வார்த்தையும் ஒளிபரப்பச் செய்த வீடியோ ஒன்று இந்திய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.



பாகிஸ்தானின் செய்தி ஊடகமான டவ்ன் நியூஸ் சேனலில் விளம்பரம் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கையில் இடையே இந்திய தேசியக் கொடி அசைய கீழே சுதந்திர தின வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மாலை 3.30 மணி அளவில் சிறிது நேரம் தோன்றி மறைந்து உள்ளது.

இது குறித்து டவ்ன் நியூஸ் சேனல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. " இந்த சம்பவத்தில் உடனடி விசாரணைக்கு ஆணையிட்டு உள்ளதாக டவ்ன் நிர்வாகம் " தன் ட்விட்டர் பக்கத்தில் உருது மொழியில் பதிவிட்டு உள்ளது. விசாரணைக்கு பிறகு பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.



Twitter link | archive link 



இந்திய ஹக்கேர்கள் பாகிஸ்தான் நாட்டின் டவ்ன் நியூஸ் சேனலை ஹக் செய்து இந்திய தேசியக் கொடியை ஒளிபரப்பியதாக இந்திய ட்விட்டர் வாசிகள் பதிவிடத் துவங்கினர். தற்போது அது இந்திய சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க