யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைய அழைப்பு விடுத்ததாக செய்தி சேனல்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், தன் ட்விட்டரில் இதற்கு மறுப்பு...
பரவிய செய்தி
அதிமுகவில் மீண்டும் இணைய டி.டி.வி தினகரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஓ.பி.எஸ் அழைப்பு.

விரிவான விளக்கம்
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைய அழைப்பு விடுத்ததாக செய்தி சேனல்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆனால், தன் ட்விட்டரில் இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டு உள்ளார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

" தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் தவறாக வெளியாகி வருகிறது. 18 எம்.எல்.ஏக்கள் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர். அவர்களுக்கு தான் அழைப்பு விடுத்தேன் " என ட்விட்டரில் கூறியுள்ளார்.
உண்மைக்கு புறம்பாக பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என ஓ.பி.எஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.