YouTurn

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழிலே திருடுவது என இபிஎஸ் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழிலே திருடுவது என இபிஎஸ் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் மாயம். புரட்சித் தலைவர் அவர்கள் அம்மாவிற்கு வழங்கிய செங்கோல் உள்ளிட்ட முக்கிய பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களைத் திருடிக் கொண்டு சென்றிருக்கிறது திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட அந்த கூட்டம் - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

விரிவான விளக்கம்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் இருந்து பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றதாகவும், அவரின் சமூகத்திற்கு திருடுவதே குலத்தொழில் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பாலிமர் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 

ஒன்றைத் தலைமையால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே உருவாகிய மோதலால், பொதுக்குழு மத்தியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அத்தருணத்தில், அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் முக்கிய ஆவணங்கள் பலவற்றை எடுத்துச் சென்ற செய்திகள் வெளியாகின.

அப்போது நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்ட போது, " அலுவலகத்தில் இருந்த ஜெயலலிதாவின் செங்கோல், வெள்ளி வேல் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் காணவில்லை " என சி.வி.சண்முகம் தெரிவித்து இருந்தார்.

ஆனால், ஓபிஎஸ் சமூகம் பற்றி இபிஎஸ் கூறியதாக பரப்பப்படும் செய்தி குறித்து பாலிமர் சேனலின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அவ்வாறு எந்த செய்தியும் இடம்பெறவில்லை. மாறாக, " ஜிஎஸ்டி உயர்வை திரும்ப பெறுக " என்ற செய்தியே இடம்பெற்று இருந்தது .



ஜூலை 20-ம் தேதி வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து சமூக வலைதளங்களில் சமூகம் சார்ந்த வதந்தியைப் பரப்பி உள்ளனர்.


முடிவு : 


நம் தேடலில், புரட்சித் தலைவர் அவர்கள் அம்மாவிற்கு வழங்கிய செங்கோல் உள்ளிட்ட முக்கிய பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களைத் திருடிக் கொண்டு சென்றிருக்கிறது திருடுவதையே குலத் தொழிலாக கொண்ட அந்த கூட்டம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க