YouTurn

ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார் என அண்ணாமலை கூறினாரா ?

ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார் என அண்ணாமலை கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எடப்பாடியாரின் தலைமைதான் நல்லது. எடப்பாடியார் தலைமைதான் அதிமுகவிற்கு நல்லது. ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல ஒரு சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார் . அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து அண்ணாமலை கருத்து.

விரிவான விளக்கம்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஒன்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல ஒரு சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார் என தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



Archive link 





உண்மை என்ன ? 

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கூறிய கருத்துக் குறித்து தேடுகையில் , " அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது; தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக அதிமுக உள்ளது. கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி " என்ற செய்தியையே தந்தி டிவி வெளியிட்டு இருக்கிறது.



Facebook link 

ஜூன் 16-ம் தேதி " அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது " என அண்ணாமலைக் கூறிய கருத்து பற்றிய வெளியான நியூஸ் கார்டில் போலியானச் செய்தியை எடிட் செய்துள்ளனர்.



அண்ணாமலைப் பற்றி பரப்பப்படும் செய்திக் குறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு கேட்கையில் , " இது போலியான செய்தி " எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில்,  எடப்பாடியார் தலைமைதான் அதிமுகவிற்கு நல்லது. ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல ஒரு சாதிக்கட்சியாக மாற்றிவிடுவார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து அண்ணாமலை கருத்து எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க