YouTurn

தேனியில் பதிவான 3 லட்சம் வாக்குகள் காணாமல் போனதா ?

தேனியில் பதிவான 3 லட்சம் வாக்குகள் காணாமல் போனதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தேனியில் துணை முதல்வர் மகன் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அது தொடர்பாக வந்த பத்திரிகை செய்தி தான் குழப்பத்திற்கு தொடக்கமாக அமைந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை தவறாக உள்ளது. மொத்த ஓட்டுக்களையும் அதிலுள்ள ஒவ்வொரு வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களையும், என்னும்...

பரவிய செய்தி

தேனியில் பதிவான 11 லட்சம் வாக்குகளில் 3 லட்சம் வாக்குகள் காணாமல் போய் உள்ளன.

விரிவான விளக்கம்

தேனியில் துணை முதல்வர் மகன் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அது தொடர்பாக வந்த பத்திரிகை செய்தி தான் குழப்பத்திற்கு தொடக்கமாக அமைந்துள்ளது.

அதில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை தவறாக உள்ளது. மொத்த ஓட்டுக்களையும் அதிலுள்ள ஒவ்வொரு வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களையும், என்னும் போது வரும் ஓட்டு எண்ணிக்கை சில லட்சம் தவறாக உள்ளது.அது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் ,அது அந்த பத்திரிக்கையின் தவறு. தேர்தல் ஆணைய தளத்தில் மிகத் தெளிவாக நேற்றிலிருந்து அவர் வாங்கிய வாக்கு, பிறர் வாங்கிய வாக்கு, மொத்த வாக்கு சரியாகத்தான் இருந்தது.



உண்மையில் ரவீந்திரநாத் ஐந்து லட்சத்திற்கு மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சம் வாக்குகளைப் பெற்று உள்ளனர். ஆனால் இது தெரியாமல் தவறாக வந்த பத்திரிக்கை செய்தியை வைத்துக்கொண்டு அதை ஒருவர் கணக்கெல்லாம் போட்டு முகநூலில் பரப்பி வருகிறார்கள்.

உண்மையில், இதில் ஏதோ முறைகேடு நடந்து விட்டது என்பது போன்ற பேச்சுகளில் அர்த்தமில்லை இது வெறும் வதந்தியே.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.