YouTurn

OPPO நிறுவனம் இந்திய ஊழியர்களை அவமதித்ததா ?

OPPO நிறுவனம் இந்திய ஊழியர்களை அவமதித்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீன செல்போன் தயாரிப்புகளில் ஒன்று தான் OPPO நிறுவனம் . இந்திய செல்போன் வணிகத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது . இப்படி வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மீது ஒரு புகார் எழுந்துள்ளது . அதாவது அந்நிறுவனத்தில் ஊழியர்களில் இந்தியர்களும் ஒருவர் . அவர்களை பிச்சைகாரர்கள் என்று கூறியதாக கூறி...

பரவிய செய்தி

OPPO செல்போன் நிறுவனம் இந்தியர்களை பிச்சைகாரர்கள் என்று கூறியதால் அந்நிறுவனத்தின் பஞ்சாப் சேவை குழு தங்கள் பதவியை விட்டு விலகுவதாக அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது .

விரிவான விளக்கம்

சீன செல்போன் தயாரிப்புகளில் ஒன்று தான் OPPO நிறுவனம் . இந்திய செல்போன் வணிகத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது . இப்படி வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் மீது ஒரு புகார் எழுந்துள்ளது . அதாவது அந்நிறுவனத்தில் ஊழியர்களில் இந்தியர்களும் ஒருவர் . அவர்களை பிச்சைகாரர்கள் என்று கூறியதாக கூறி ஒரு செய்தி இணையத்தில் காணப்படுகின்றது .


தவறான நடவடிக்கை காரணமாக பஞ்சாப் சேவை குழு மேலாளர் அருண் ஷர்மா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் . அங்கு வேறொரு மேலாளர் இந்தியர்களையும் அவர்களின் கலாசாரத்தையும் அவமதிக்கின்றார் , எங்களுக்கு எந்தவித மரியாதையும் தருவதில்லை , தேவை இல்லாமல் தண்டனைகள் வழங்குகின்றார் , தங்களுக்கு பணி சுமை அதிகம் ஏற்படுத்துகின்றார் , சம்பள உயர்வு கேட்கும் போது இந்தியர்கள் பணத்தின் மீது மட்டுமே குறியாக உள்ளனர் என்றெல்லாம் கூறுகிறார் இப்படிக்கு பஞ்சாப் சேவை குழு என்று அக்கடிதத்தில் இருந்தது .


இதை மேலாளர் அருண் ஷர்மா மறுத்துள்ளார் . இந்த செயலை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை , ஆனால் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் மேலாளர் அருண் ஷர்மா பத்திரிக்கைகளுக்கு தெரிவித்துள்ளார் . ஆனால் அதில் உள்ள கையெழுத்துகள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை . இவை பற்றி பேச தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார் .


மேலும் OPPO நிறுவனம் இவ்வித தவறான அறிக்கைகள் இனிமேல் வராமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று பதிவிட்டுள்ளன . ஒன்றன்பின் ஒன்று முரணாகவே இருக்கிறது . மார்ச் 2017 இல் ஒப்போ நிறுவன ஆலையில் ஊழியர் ஒருவர் இந்திய கொடியை அவமதித்ததாக கூறி நீக்கப்பட்டது குறுப்பிடப்பட வேண்டியது .

சுருக்கமாக

ஊழியர்கள் ஒன்று கூறுகிறார்கள் , நிறுவனம் ஒன்று கூறுகிறது . இப்படி இருந்தால் எது உண்மை என்று தீர்மானிப்பது ......

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க