YouTurn

இந்து பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்தி கொலை செய்ததாகப் பரவும் வதந்தி!

இந்து பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்தி கொலை செய்ததாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

’ஆஷிகா பர்வீன்’ என்ற பெயர் ‘யாஷிகா’ எனத் தவறாக செய்தி வெளியிட்ட பாலிமர். அந்த தவறான செய்தியை கொண்டு மதப்பிரிவினை தூண்டும் வகையில் வலதுசாரிகள் பொய் செய்தி பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

முஸ்லிம் குடும்பத்தின் லவ் ஜிகாத் சதியால் வீழ்த்தப்பட்ட இந்து பெண் யாஷிகா மதம் மாற மறுத்ததால் சோற்றில் சயனைட் விஷத்தை வைத்து படுகொலை செய்த மாமியார். என்ன எழவெட்டுத்த மத கோட்பாடோ?

ooty sained murder case

X link

விரிவான விளக்கம்

இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றக்கூடிய குடும்பத்தில் மருமகளாகச் சென்றதாகவும் அப்பெண் மதம் மாற மறுத்ததால் மாமியார் விஷம் கொடுத்து மருமகளைக் கொலை செய்ததாகவும் வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்று பரப்பப்படுகிறது. 

அப்பதிவில் பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தியின் புகைப்படம் ஒன்று உள்ளது. அதில், யாஷிகா என்ற பெண் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


உண்மை என்ன?

பரவக்கூடிய சம்பவம் குறித்துத் தேடியதில், இது தொடர்பாக ‘தி இந்து’, ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற ஊடகங்களில் செய்தி வெளியாகி இருப்பதைக் காணமுடிந்தது. 


நீலகிரி மாவட்டம் ஊட்டியைச்‌ சேர்ந்த இம்ரான் மற்றும் ஆஷிகா பர்வீன் இருவரும் காதலித்து 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி மாலை ஆஷிகா பர்வீன் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். 

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆஷிகா இறந்துவிட, விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் எனக் கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆஷிகா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் 20 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் சயனைட் கொடுத்து ஆஷிகா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக வெளியான அனைத்து செய்திகளிலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ‘ஆஷிகா பர்வீன்’ என்றுதான் உள்ளது. ஆஷிகா பர்வீன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் பெயர் அப்துல் சமது - நிலோபர் நிஷா. மேலும் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய உறவினர்களும் இஸ்லாம் மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அணியும் உடைகளை அணிந்திருப்பதை காணமுடிகிறது. அப்படி இருக்கையில் மதம் மாறச் சொல்லி ஏன் கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும். 


பரவக்கூடிய பதிவில் உள்ள பாலிமர் செய்தியில் இறந்த பெண்ணின் பெயர் ‘யாஷிகா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால், நேற்று இரவு (செப்.02) சுமார் 08.30 மணியளவில் பாலிமர் நியூஸ் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த செய்தியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ‘ஆஷிகா பர்வீன்’ என்று சரியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதலில் யாஷிகா எனத் தவறாகக் குறிப்பிட்டு பிறகு ‘ஆஷிகா’ எனச் சரி செய்தார்களா என்பதை அறிய பாலிமர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதையும் இக்கட்டுரையில் இணைப்போம்.

இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் காதலித்து திருமணம் செய்தி மதம் மாற்றுகின்றனர் என ஒரு பொய்ப் பிரச்சாரத்தை வலதுசாரிகள் தொடர்ந்து பரப்புகின்றனர். அத்தகைய பொய்ப் பிரச்சாரத்திற்கு ‘லவ் ஜிகாத்’ எனப் பெயர் வைத்து வதந்தி பரப்புகின்றனர். அப்படியான ஒரு பொய்தான் இதுவும். 

முடிவு: 

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்தி முஸ்லிம் குடும்பம் கொலை செய்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. கொலை செய்யப்பட்ட ’ஆஷிகா பர்வீன்’ என்ற பெண்ணின் பெயரை ’யாஷிகா’ என பாலிமர் தவறாகச் செய்தி வெளியிட்டதைப் பயன்படுத்திப் பொய் செய்தி பரப்புகின்றனர்.




பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க