யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம் ! காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா சோனியா காங்கிரஸ் கட்சியை எப்படி தோல் உரிக்கிறார் பாருங்கள் ? “ பாரதிய ஜனதா கட்சி 20/30 வருடங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஒரு முறை கூட இந்தியாவின் கவுரவத்தை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி பேசியதில்லை. ஆனால் வெறும் 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியோ, இந்தியா முன்னேற்றம் காணும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அதை மட்டம் தட்டி அவமானப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறது.” இதை விடவா காங்கிரஸ் கட்சிக்கு அசிங்கம் வேண்டும் ?

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தன் ட்விட்டர் பக்கத்தில், பாஜக 20-30 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த போதும் இந்தியாவை அவமதித்தது இல்லை, ஆனால் 7 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்தியாவின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அவமதிப்பதாக பதிவிட்டு உள்ளார் என ஓர் ட்வீட் ஸ்க்ரீன்ஷார்டை பாஜக ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகின்றனர்.

உண்மை என்ன ?
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரு யூனியன் பிரதேசமாக பிரித்தது பாஜக அரசு. இப்படி இருக்கையில், உமர் அப்துல்லா பாஜகவின் செயல்பாட்டை ஆதரித்து இப்படியொரு ட்வீட் வெளியிட்டு இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது.
Tweet link | Archive link
ட்வீட் பதிவில் Farrago Adullah(@abdullah_omar) என இடம்பெற்று இருப்பதை வைத்து தேடுகையில், Farrago Adullah ட்விட்டர் பக்கம் கிடைத்தது மற்றும் வைரல் செய்யப்படும் ட்வீட் ஜூன் 16-ம் தேதி வெளியாகி இருக்கிறது . ஆனால், அது உமர் அப்துல்லா உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் அல்ல. அது போலியாக உருவாக்கப்பட்ட ட்விட்டர் பக்கம் என அறிய முடிந்தது.

Farrago Adullah ட்விட்டர் பக்கத்திலேயே, " இது அதிகாரப்பூர்வமற்ற கணக்கு, போலியானது, மீண்டும் உமர் அப்துல்லாவால் ப்ளாக் செய்யப்பட்டது, நான் பாகிஸ்தானி அல்ல " எனக் கூறப்பட்டு இருக்கிறது.

Original twitter
காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லாவின் உண்மையான, அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்த ட்வீட் பதிவும் வெளியாகவில்லை.
முடிவு :
நம் தேடலில், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்தியாவின் முன்னேற்றம் காணும் போது ஒவ்வொரு கட்டத்திலும் அவமதிப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் வெளியிட்டதாக பரவும் ட்வீட் போலியானது, அது போலியான ட்விட்டர் பக்கம் என அறிய முடிகிறது.

BJP was in opposition for almost 20-30 years but they NEVER defame India. Never Ever.
Congress just 7 years in Opposition and has been defaming India at every stage of development.
— Farrago Abdullah (@abdullah_0mar) June 16, 2021