YouTurn

இந்து பெரியவரை மிரட்டி பெரியாரை வணங்க வைத்தனரா ?

இந்து பெரியவரை மிரட்டி பெரியாரை வணங்க வைத்தனரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கருப்பு சட்டை அணிந்தவர்கள் சூழ வயதான பெரியவர் ஒருவர் பெரியார் சிலையை வணங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Trueorfake எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்த இப்பதிவில் இந்து பெரியவரை மிரட்டி பெரியாரை வணங்க வைத்து உள்ளனர் எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். இந்த பதிவிற்கு பலரும்...

பரவிய செய்தி

இந்து பெரியவரை மிரட்டி பெரியானை கும்பிடவைத்த பெரியாரிஸ்ட்கள் எங்கேடா போனீங்க நடுநிலை.

விரிவான விளக்கம்

கருப்பு சட்டை அணிந்தவர்கள் சூழ வயதான பெரியவர் ஒருவர் பெரியார் சிலையை வணங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Trueorfake எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்த இப்பதிவில் இந்து பெரியவரை மிரட்டி பெரியாரை வணங்க வைத்து உள்ளனர் எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.



இந்த பதிவிற்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு இருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பதிவை ஷேர் செய்து இருந்தனர். ஆனால், இப்பதிவில் இருந்த வீடியோ காட்சி 16 நொடிகள் மட்டுமே ஓடின. இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது, யார் செய்தார்கள் என்ற விவரங்கள் அளிக்கப்படவில்லை.

பெரியவரை வலுக்கட்டாயமாக பெரியார் சிலையை வணங்க வைத்து இருந்தால் அது செய்தியாகி இருக்கும் அல்லது குறைந்தபட்சம் வழக்காவது பதிவாகி இருக்கும். ஆனால், அப்படியான தகவல் இல்லை.



சமூக வலைதளத்தில் வன்மத்தை உருவாக்கி வரும் இந்த பதிவை பற்றிய சரியான தகவலை அளிக்க ஆராய்ந்து பார்க்க வேண்டி இருந்தது. வைரலாகும் வீடியோவில் பெரியவரை யாரும் கட்டாயப்படுத்துவது போன்று தெரியவில்லை. அடுத்ததாக, அந்த வீடியோவின் கீழே ஒரு லோகோ இருக்கிறது. அது " கறுப்பர் கூட்டம் " எனும் முகநூல் பக்கத்தின் லோகோ என அறிந்த பிறகு, அந்த முகநூல் பக்கத்திற்கு சென்று வீடியோ குறித்து தேடுகையில் வீடியோ தொடர்பான பதிவுகள் இல்லை.

இதையடுத்து, " கறுப்பர் கூட்டம் " முகநூல் பக்கத்திற்கு தொடர்பு கொண்டோம். பெரியவரின் வீடியோ குறித்து கேட்டற்கு youtube-ல் வெளியான முழு வீடியோவை அளித்தனர். அவர்களின் youtube சேனலில் ஜூன் 24, 2019-ல் இந்த வீடியோவின் முழு பதிவும் பதிவிடப்பட்டு உள்ளது. அதற்கு " பூணூல் தோழர் | பறையிசையுடன் பெரியார் சிலையை வணங்கிய முதியவர் " என தலைப்பிட்டு இருந்தனர். இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.



மிரட்டி வலுக்கட்டாயமாக பெரியாரை வணங்க வைத்ததாக கூறப்படும் பெரியவர் அந்த வீடியோவில் நடனமாடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. அவராகவே அனைவரையும் ஒதுக்கி இருக்க சொல்லி நடனம் ஆடுகிறார், ஒரு இடத்தில் அவரிடம் பறையை வழங்கி உள்ளனர், அதற்கு தன் பூணூலை காண்பித்து வேண்டாம் என கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது.

Youtube சேனலில் 1.37 நிமிடங்கள் ஓடிய வீடியோவில் பெரியவர் நடனமாடுவதே இடம்பெற்று இருக்கிறது. அந்த வீடியோவில் பெரியவர் வணங்கும் காட்சி இடம்பெறும் 16 நொடிகளை மட்டும் கட் செய்து பதிவிட்டு உள்ளனர். அதையே, Trueorfake என்ற முகநூல் பக்கமும் வன்மத்தை தூண்டும் தலைப்புடன் பதிவிட்டு இருக்கிறது.

முடிவு :

முழுமையான வீடியோவை ஆதாரமாக வைத்து இந்து பெரியவரை யாரும் மிரட்டி பெரியார் சிலையை வணங்க வைக்கவில்லை என்றும், அவராக வணங்கும் காட்சிகளும், நடனமாடும் காட்சிகளும் இருப்பதன் அடிப்படையில் பரவும் பதிவுகள் தவறாக திரிக்கப்பட்ட வதந்திகளே என புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…