YouTurn

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் எனப் பரவும் பழைய காணொளிகள்!

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் எனப் பரவும் பழைய காணொளிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

இவை கடந்த 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட பழைய காணொளிகள். இதை தற்போது பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

Claim 1: ஹே ஹரே ராம் தமிழ்நாடு டெம்பிலேட்



X Link | Archive Link


Claim 2: திருச்செந்தூரில் வெள்ளம்



Facebook Link:

விரிவான விளக்கம்

வங்கக் கடலில் அக்டோபர் 21, காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 


இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று கூறி இரண்டு காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 




உண்மை என்ன? 


பரவி வரும் காணொளிகளின் கீஃபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இவை தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Area_friend_s’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் முதல் வீடியோ கடந்த 2023-ல் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இதே போன்று, மற்றொரு வீடியோவும் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் என்று குறிப்பிட்டு கடந்த 2023 டிசம்பரில் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


#TamilNadu districts.
Here are the few visuals from affected areas
#TNfloods #NEM2023 #Tenkasi #Tirunelveli #Thoothukudi pic.twitter.com/kT3Za218b7

— Eastcoast Weatherman (@eastcoastrains) December 18, 2023


இதன் மூலம, கடந்த 2023-ல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை தற்போது பெய்து வரும் மழையோடு தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில்,  பரவி வரும் காணொளிகள் கடந்த 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்டவை. இதனை தற்போது நடைபெற்ற சம்பவங்கள் என்று கூறி பலரும் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க