YouTurn

ஈரானில் பெண்கள் இனி ஹிஜாப் அணியத் தேவையில்லையா? பரவும் பழைய வீடியோ!

ஈரானில் பெண்கள் இனி ஹிஜாப் அணியத் தேவையில்லையா? பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022 செப்டம்பரில் எடுக்கப்பட்ட வீடியோவை, ஈரானில் தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான மாபெரும் போராட்டம் வெற்றி. பொதுமக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்தது ஈரான் அரசு. பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் நடமாடலாம். அது சட்டவிரோதமல்ல என்று ஈரான் அரசு அறிவிப்பு. 


Facebook Link | Archive Link


விரிவான விளக்கம்

ஈரானில் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணியாமல் இனி நடமாடலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பெண்கள் சிலர், தங்கள் ஹிஜாப்பை நெருப்பில் இட்டு கொளுத்துவதைத் தெளிவாகக் காண முடிகிறது. 



#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Janasakthi (@janasakthi_tholaikatchi)


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



Sky News” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு “ஈரானிய பெண்கள் ஹிஜாப்களை எரித்தும், தலைமுடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்ற தலைப்பில் கடந்த 2022 செப்டம்பர் 21 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


அதில், “2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று ஆடை விதிகளை மீறியதாகக் கூறி 22 வயதான மஹ்சா அமினி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு தடுப்பு மையத்தில் சரிந்து விழுந்து மருத்துவமனையில் இறந்தார்“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, “BBC News” யூடியூப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, “மஹ்சா அமினி: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தங்கள் ஹிஜாப்களை எரித்தனர் - பிபிசி செய்தி“ என்ற தலைப்பில் கடந்த 2022-ல் செய்தி வெளியிட்டிருந்தனர். 



இதன் மூலம் கடந்த 2022 செப்டம்பரில் ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து, ஹிஜாப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈரானிய பெண்கள் தங்கள் ஹிஜாப்களை எரித்தும், தலை முடியை வெட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது உறுதியாகிறது. 


மேலும் தற்போது ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை செய்யப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அங்கு அந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதையும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. 



முடிவு: 


நம் தேடலில், கடந்த 2022 செப்டம்பரில் எடுக்கப்பட்ட வீடியோவை, ஈரானில் தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க