YouTurn

"வடலூரில் தனியார் பள்ளியில் மத அடையாளம்" எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

"வடலூரில் தனியார் பள்ளியில் மத அடையாளம்" எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் இது. இதை திமுக ஆட்சியில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் மத அடையாளம் உள்ளது என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

Polymer News தவிர, வேறு எந்த சானலிலும் இது வராது. எப்படி? ஹஹ்ஹஹா.. வராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள  தனியார் ஆங்கிலப்பள்ளியில் கிறித்துவ மதத்தின் அடையாளங்களை பதிய வைக்கும் முயற்சியாக எ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள் என்று அச்சிடப்பட்ட புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அவ்வாறு அச்சிடப்பட்ட புத்தகம் காட்டப்படுவதையும் தெளிவாகக் காண முடிகிறது. 



#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக (@madathukulam_constituency_bjp)


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


“நியூஸ்18 தமிழ்” ஊடகப் பக்கத்தில், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ குறித்து கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்றே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 



அந்த செய்தியில், “கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைபள்ளி ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் ஏ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள், சி ஃபார் கிறிஸ்து, என்றும் ஐ ஃபார் இம்மானுவேல், ஜெ ஃபார் ஜீசஸ் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இதனை தினமும் மாணவர்கள் மனதில் பதியவைக்கும் வகையில் எழுத்து பயிற்சியும் கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


எனவே,  முதன்மை கல்வி அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதன் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் இது என்பது தெளிவாகிறது. இதை திமுக ஆட்சியில் வடலூரில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் மத அடையாளம் உள்ளது என்று குறிப்பிட்டு சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், “திமுக ஆட்சியில் வடலூரில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் மத அடையாளம்” எனப் பரவும் வீடியோ கடந்த  2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க