YouTurn

'ஈரானுக்கு பயந்து இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்' எனப் பரவும் பழைய வீடியோ!

'ஈரானுக்கு பயந்து இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்' எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“ஈரானுக்கு பயந்து இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்” என்று கூறி பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்த பழைய வீடியோவை தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போருடன் தொடர்புடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

ஈரானுடன் போரில் இறங்க மறுக்கும் இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்.. என்னா அடி அடிக்கான் ஈரான்.. இதுக்குத்தான் சொல்லுறது சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் என்ன ஒரு சீராழிவு..


Facebook Link:

விரிவான விளக்கம்

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 


இந்த சூழலில், “ஈரானுக்கு பயந்து இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், கூட்டமாக ராணுவ வீரர்கள் ஓடுவதை தெளிவாகக் காண முடிகிறது. 



உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2024 நவம்பரில் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 


அப்பதிவுகளில், நெதன்யாகு நேற்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டை பதவி நீக்கம் செய்த பிறகு இடம்பெற்ற சம்பவம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, “Bar Peleg“ எக்ஸ் பக்கத்தில் கடந்த 2024 நவம்பர் 06 அன்று பதிவிடப்பட்டுள்ள பதிவிலும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேய்ட்லண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் வீதிகளில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அப்பதிவில், “அயலான் தெற்கில் உள்ள எல்லைக் காவல் அதிகாரிகள் தீயை அணைக்கும் கருவிகளுடன் ஒரு பெரிய குழுவாக நகர்கின்றனர், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



எனவே இது குறித்து ஆய்வு செய்ததில், உள்நாட்டு அரசியல் மற்றும் இஸ்ரேலின் போர் முயற்சிகள் தொடர்பாக பல மாதங்களாக ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட்டை பதவி நீக்கம் செய்துள்ளார். இஸ்ரேலின் மிக முக்கியமான நட்பு நாடான அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேலண்ட் அமெரிக்க நிர்வாகத்திற்கு நெருக்கமான பேச்சாளராக உள்ளார், மேலும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுடன் தினமும் உரையாடுவதாக கூறப்படுகிறது என்றும் CNN ஊடகத்தில் கடந்த 2024 நவம்பர் 06 அன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் அதில், நெதன்யாகு கேலண்டை பணிநீக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல் அவிவில் நடந்த போராட்டத்தின் போது ஒரு குழுவை அப்புறப்படுத்த போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர் என்றும் குறிப்பிட்டு புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.



இதன் மூலம் பரவி வரும் வீடியோவிற்கும், தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், “ஈரானுக்கு பயந்து இஸ்ரேல் வீரர்கள் தப்பி ஓட்டம்” என்று கூறி பரவி வரும் வீடியோ கடந்த 2024-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்த பழைய வீடியோவை தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போருடன் தொடர்புடுத்தி தவறாகப் பரப்புகின்றனர் என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க