YouTurn

முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பரவும் பழைய வீடியோ!

முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாடியதாக பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022 நவம்பரில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 108 பேர், கந்த சஷ்டி கவசம் பாடும் நிலழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.

பரவிய செய்தி

நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து பாடிய கந்த சஷ்டி கவசம்.. தமிழகத்தின் அடுத்த இந்து சனாதனிகள் மனம் உருகி அருமையாக பாடிய கந்த சஷ்டி கவசம்.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர் எனக் கூறி வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 


மேலும் அவ்வீடியோவை, “தமிழகத்தின் அடுத்த இந்து சனாதனிகள் மனம் உருகி அருமையாக பாடிய கந்த சஷ்டி கவசம்” என்று கூறி பரப்பி வருவதையும் காண முடிகிறது.


#MuruganMaanadu#Kanthasastikavasam pic.twitter.com/Gtpd11iybO

— Thondi Ananthan👍 (@thondiananthan) June 20, 2025


#MuruganMaanadu pic.twitter.com/9XC75rQEWO

— Selvakumar Pollachi (@selva_ssinfotec) June 20, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


AALAYA TV” யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ கடந்த 2022-ல் “100 கல்லூரி மாணவிகள் ஒன்றாக பாடிய கந்த சஷ்டி கவசம்” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது. 



எனவே பரவி வரும் வீடியோ குறித்து மேலும் தேடியதில், கடந்த 2022 நவம்பரில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 108 பேர் வடபழனியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி இது என்பதையும், இந்த கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தான் தொடங்கி வைத்துள்ளார் என்பதையும் அறிய முடிந்தது இதனை “Thanthi TV”  வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது. 



அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர் எனக் கூறி பலரும் தவறாக பரப்பி வருகின்றனர். 


மேலும் இதே போன்று, கடந்த ஆண்டும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கந்த சஷ்டி பாராயணம் நடத்தப்பட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



 முடிவு: 


நம் தேடலில், மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர் எனக் கூறி பரவும் வீடியோ, கடந்த 2022-ல் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்வில் எடுக்கப்பட்ட பழைய வீடியோஎன்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க