யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த மார்ச் மாதம் IPL - 2024 போட்டி தொடங்கியது. இதன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான ஒரு போட்டி கடந்த சனிக்கிழமை (மே.18) சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையே பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பெங்களூர் அணி வெற்றிப் பெற்ற நிலையில் அதன் ரசிகர்கள் சென்னை ரசிகர்களைத் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இது 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ‘Sports Tak’ என்னும் யூடியூப் பக்கத்தில் 2018, ஏப்ரல் 11ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பில் போராட்டக்காரர்களால் CSK ரசிகர்கள் தாக்கப்பட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு மேற்கொண்டு தேடியதில், ‘times of india plus’ பேஸ்புக் பக்கத்திலும் இது தொடர்பான வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அப்பதிவில் ’Mumbai Mirror’ இணையதளத்தில் வெளியான செய்தியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிரிக்கெட் ரசிகர்களை அடித்தனர் என்றுள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து 2018ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களை IPL திசை திருப்புவதாகக் கூறி சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை பல்வேறு கட்சியினர் முன்வைத்து வந்தனர்.
ஆனால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. அப்படி சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியின் போது நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களில் சிலர் கிரிக்கெட் ரசிகர்களைத் தாக்கினர்.
அப்படி CSK மற்றும் டோனியின் ரசிகரான சரவணன் ஹரி தாக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோவைத்தான் தற்போது எடுக்கப்பட்டது போல் தவறாகப் பரப்புகின்றனர்.
தன்னை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகச் சரவணன் ஹரி ஊடகத்திடம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் கடந்த சனிக்கிழமை போட்டி முடிந்ததும் CSK ரசிகர் ஒருவரை RCB ரசிகர்கள் பலர் சூழ்ந்து நின்று கிண்டல் செய்வது போன்ற வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், CSK ரசிகர் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோவிற்கும் இதற்கும் தொடர்பில்லை.
முடிவு:
CSK ரசிகர் RCB ரசிகர்களால் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இது 2018ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகச் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
விராட் கோலி விதைத்த விதை....
மட்டமான RCB ரசிகர்கள்.. pic.twitter.com/jYAdV43TjJ
— Jaya Kanagaraja (@Kisha1625) May 21, 2024

— Out Of Context Cricket (@GemsOfCricket) May 19, 2024