YouTurn

திமுக ஆட்சியில் பள்ளி செல்ல சாலை வசதி இல்லாமல் கஷ்டப்படும் மாணவர்கள் எனப் பரவும் பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் பள்ளி செல்ல சாலை வசதி இல்லாமல் கஷ்டப்படும் மாணவர்கள் எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் சிலர் சேறு நிறைந்த பாதையின் வழியே நடக்க முடியாமல் நடந்து வருவதை காட்டும் வீடியோ, தற்போது எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ!

பரவிய செய்தி

டம்மி அப்பாவின் சாதனை! கோபாலபுர_கோமாளி யின் ஆட்சியை எவரும் குறை சொல்ல முடியாது!! குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்!!! கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி 


X Link | Archive Link

விரிவான விளக்கம்

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 02 அன்று தமிழ்நாட்டில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே கஷ்டப்படும் காட்சியைப் பாருங்கள் என்று கூறி 20 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில், பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் சிலர் சேறு நிறைந்த பாதையின் வழியே நடக்க முடியாமல் நடந்து வருவதையும் தெளிவாகக் காண முடிகிறது. இதனை அதிமுகவினர் பலரும் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.


#கோபாலபுர_கோமாளி யின் ஆட்சியை எவரும் ர
குறை சொல்ல முடியாது!!

குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்!!!

கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி
#திமுக_கேடு_தரும் pic.twitter.com/HFERyZjpqR

— Gowri Sankar D - Say Yes to Women Safety&AIADMK (@GowriSankarD_) June 10, 2025


#கோபாலபுர_கோமாளி யின் ஆட்சியை எவரும் ர
குறை சொல்ல முடியாது!!

குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்!!!

கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி
#திமுக_கேடு_தரும் #EPSfor2026 #இரா_குமரகுரு #kallakuruchi_aiadmk_it_wing_sengurichi_akbar pic.twitter.com/jvWfSHdMUl

— அஇஅதிமுக எங்கள் உயிர் (@77Upt3227) June 11, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் காட்சிகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இதே காட்சிகளைக் கொண்ட வீடியோ கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



மேலும் அப்பதிவுகளில், “மயிலாடுதுறை பள்ளி செல்ல திணறும் மாணவர்கள் சேறு நிறைந்த பாதையில் பயணம்...!!! 2 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வரும் மாணவர்கள்..!!!“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


எனவே இது குறித்து மேலும் தேடியதில், வீடியோவில் இருப்பவர்கள் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செட்டிக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிய முடிந்தது. இது குறித்து கடந்த 2019-ல் விகடனில் வெளியிடப்பட்ட செய்தியில், “செட்டிக்கட்டளை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயக் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஓடக்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஓடக்கரை மண் சாலை மட்டுமே உள்ளது. 2 கி.மீ தூரமுள்ள இந்த மண் சாலை சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கற்சாலையாக மாற்றப்படவில்லை“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம் கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டது போல் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில்,  திமுக ஆட்சியில் சாலை வசதியில்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே கஷ்டப்படும் காட்சி என்று கூறி பரவி வரும் வீடியோ, கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க