YouTurn

பாகிஸ்தான் மத போதகர் யூதர்களுக்கு எதிராக பேசிய பொய்யால் மேடை இடிந்தது எனத் தவறாகப் பரவும் பழைய வீடியோ !

பாகிஸ்தான் மத போதகர் யூதர்களுக்கு எதிராக பேசிய பொய்யால் மேடை இடிந்தது எனத் தவறாகப் பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இவர் பாக்கிஸ்தானின் இஸ்லாமிய மத போதகர். இவர் தன் கனவில் முகம்மது நபி அவர்கள் வந்து யூதர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார் என்றும், தான் சொல்வது பொய்யான தகவலாயிருந்தால் இந்த மேடை இடிந்து விழுகட்டும் என்றார். உடனே...


Facebook Link:

விரிவான விளக்கம்

பாகிஸ்தானின் இஸ்லாமிய மத போதகர் ஒருவர், "தன் கனவில் முகம்மது நபி அவர்கள் வந்தார், யூதர்களையெல்லாம் அவர் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார். தான் சொல்வது பொய்யான தகவலாயிருந்தால் இந்த மேடை இடிந்து விழட்டும்" என்று மேடையில் அவர் பேசி கொண்டிருக்கும் போதே மேடை இடிந்து விழுவது போன்று உள்ள 24 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2018-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.



இதுகுறித்து The Express Tribune என்ற ஊடகத்தில், பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளுடன், கடந்த 2018, ஜூலை 18 அன்று "மொஹமது மேடை சரிவில் ஜெ தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் காயமின்றி தப்பித்தனர்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "2018 ஜூலை 18 புதன்கிழமை அன்று பாகிஸ்தானில் அமைந்துள்ள மொஹமது மாவட்டத்தில் ஜமாத்-இ-இஸ்லாமியின் அரசியல் கூட்டத்திற்கான மேடை அமைப்பு இடிந்து விழுந்தது.

இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தற்காலிக மேடையின் அதிகபட்ச கொள்ளளவை விட அதிகமான மக்கள் இடம் பெற முயற்சித்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதே போன்று பாகிஸ்தான் ஊடகமான Ary News வெளியிட்டுள்ள செய்தியிலும், "ஜமாத் தலைவர் பிரச்சாரப் பேரணிக்கு வந்தபோது, ​​ஏராளமான கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மரப்பலகைகளால் கட்டப்பட்ட மேடையில் ஏறினர், அது பெரும் சுமையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது. JI தலைவர், ARY நியூஸிடம் பேசுகையில், இந்த சம்பவத்தில் அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தினார். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேடை இடிந்து விழுந்தது. தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை இந்த சம்பவம் பாதிக்காது என்றார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



2018 ஜூலை 18ம் தேதி Public நியூஸ் எனும் யூடியூப் சேனலில், " Stage collapses during Jamaat-e-Islami (JI) election campaign " என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.

மேடையில் இருப்பவர் உருது மொழியில் பேசி இருக்கிறார். உருது மொழி பேசுபவர்கள் மூலம் மொழிபெயர்ப்பு செய்து பார்க்கையில், அவர் சலார்-இ-ஃகபிலா(எங்கள் தலைவர்), குவைத்-இ-மில்லத்-இஸ்லாமியா(முஸ்லிம் தேசிய தலைவர்) என வரிசையாக பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர்களை வரவேற்பதாக பேசி இருக்கிறார். அதில், யூதர்கள் பற்றி ஏதும் பேசவில்லை என்பதை அறிய முடிந்தது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோ 2018-ல் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், அது தவறாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் படிக்க: கேரளாவில் உள்ள சர்ச்சில் ரூ7000 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டதாகப் பரவும் தவறான தகவல் !

முடிவு:

நம் தேடலில், "பாகிஸ்தான் இஸ்லாமிய மத போதகர் யூதர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருந்தால் இந்த மேடை இடிந்து விழும் என்று கூறியதும் மேடை இடிந்து விழுந்தது" எனப் பரவி வரும் தகவல்கள் தவறானவை. இது கடந்த 2018-ல் தேர்தல் பிரச்சாரத்தின் போது  எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், அதில் யூதர்கள் பற்றி ஏதும் பேசவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க