YouTurn

புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய காவல்துறை அதிகாரி எனப் பரவும் பழைய வீடியோ!

புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய காவல்துறை அதிகாரி எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

புகார் கொடுக்க வந்தவரை கொடூரமாக தாக்கிய காவல்துறை அதிகாரி என்று கூறி பரவி வரும் வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

புகார் கொடுக்க வந்தவரை கொடூரமாக தாக்கிய காவல்துறை அதிகாரி


X Link | Archive Link

விரிவான விளக்கம்

புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய காவல்துறை அதிகாரி என்று கூறி 29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது, வீடியோவில் காவல்துறை அதிகாரி ஒருவர் புகார் கொடுக்க வந்த ஒருவரிடம் கடுமையாக பேசி, அவரை அறைவதையும் காண முடிகிறது. 


X Link


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



Saree Collections” யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோ கடந்த 2019 ஜூன் 24 அன்று “அப்பாவி ஒருவரை அடிக்கும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி“ என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 



இது குறித்து மேலும் தேடியதில், “Times of India “ ஊடகத்தின் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த 2019-ல் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “சின்னசேலத்தில் லாரி ஓட்டுநரை திட்டி, அறைந்ததற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம், சின்ன சேலத்தில் கடந்த 2019-ல் புகார் கொடுக்க வந்த லாரி ஓட்டுநர் ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் அறைந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இந்த சம்பவத்தை அடுத்து எஸ்ஐ சண்முகம் விழுப்புரம் ஆயுதப்படை ரிசர்வ் பிரிவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பது உறுதியாகிறது.

இந்நிலையில் பழைய வீடியோவை பலரும் தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர் 


முடிவு:


நம் தேடலில், புகார் கொடுக்க வந்தவரை கொடூரமாக தாக்கிய காவல்துறை அதிகாரி என்று கூறி பரவி வரும் வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க