யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2025 செப்டம்பர் மாதம் நேபாலில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டத்தில், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
மெக்சிகோவில் 'எல் மேன்சோ' கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

விரிவான விளக்கம்
’எல் மென்சோ’ என்று அழைக்கப்படும் ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ் என்ற சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் கார்டலின் தலைவன். அவன் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மெக்சிக்கோவின் சிறப்புப் படைகளால் கொல்லப்பட்டான். இதனால் மெக்சிக்கோவின் முக்கிய நகரங்களில் தீ வைப்பு, சூறையாடல் என வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவை வரிசையாக எரிந்து கொண்டிருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, ’எல் மென்சோ’ கொல்லப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மெக்சிக்கோவில் கலவரம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ’ என்று பரப்புகிறார்கள்.
#Mexico 🇲🇽
State of war - Mexico is on maximum alert following the confirmation of the death of 'El Mencho', a leader of the CJNG.
The nation is experiencing:
- Narcobloqueos
- Vehicles set on fire
- Highways closed
The situation raises questions about the future of drug… pic.twitter.com/8kNKg0EmMe
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘Show of Force’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில் ‘நேபாலில் நடந்த போராட்டம் தீவிரமடைந்து போராட்டக்காரர்கள் தீ வைப்பில் ஈடுபட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேடியபோது, ’SA News Sikkim’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2025 செப்டம்பர் மாதம் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், நேபாலில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டத்தில், காத்மண்டூவில் சிங்கா தர்பார் என்ற இடத்தின் அருகே போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ நேபாலில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து நடந்த இளைஞர்கள் போராட்டத்தில், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
நேபாலில் 2025 செப்டம்பர் மாதம் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தற்போது மெக்சிக்கோவில் ’எல் மென்சோ’ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிக்கோ நகரங்களில் நடந்த கலவரத்தின் போது எடுக்கப்பட்டது என தவறாக பரப்புகிறார்கள்.