YouTurn

வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட 'இந்து கடை' என்று தவறான செய்தி பரப்பும் வலதுசாரிகள்!

வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட 'இந்து கடை' என்று தவறான செய்தி பரப்பும் வலதுசாரிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் பகுதியில் உள்ள 15 கடைகளில் தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இதனை தற்போது ஏற்பட்டுள்ள வங்கதேச கலவரத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

இது தலித் இந்து  கடை. வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் கடை எரிக்கப்பட்டது. எரிப்பு அல்லது கொலைக்கு முன் ஜாதி, மொழி  பகுதியைக் கேட்க மாட்டார்கள். நீ ஒரு இந்து, இதுவே போதும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை இந்துக்களுக்கு..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 33 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதன் பின்னணியில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அரசு இருந்ததன் காரணமாக, அங்கு தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது. 

இதனையடுத்து அங்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வங்கதேச கலவர சம்பவம் என்று கூறி பல வீடியோக்கள் கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக தற்போது தலித் இந்து கடை ஒன்று வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. மேலும் அதில் லக்ஷ்மிபூரில் உள்ள 'ராஜன் சந்திரா' என்ற இந்துவின் கடை தான் எரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு பரப்பப்படுகிறது. 

மேலும் இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடையின் புகைப்படம், பரவி வரும் வீடியோவின் காட்சிகளோடு சரியாக பொருந்துவதையும் உறுதி செய்ய முடிகிறது.

இதன்மூலம் பரவி வரும் வீடியோ கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் பகுதியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், லக்ஷ்மிபூரில் உள்ள 'ராஜன் சந்திரா' என்ற இந்துவின் கடை தான் எரிக்கப்பட்டது என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும் அறிய முடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், இந்து கடை ஒன்று வங்கதேசத்தில் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது என்று பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க