YouTurn

ரஷ்யா மற்றும் ஜப்பான் நிலநடுக்கத்தோடு தொடர்புபடுத்தப்படும் பழைய வீடியோ!

ரஷ்யா மற்றும் ஜப்பான் நிலநடுக்கத்தோடு தொடர்புபடுத்தப்படும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ ஜுலை 1 முதலே பல்வேறு சமூகவலைதலப்பக்கங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்தது. இதை ரஷ்யா மற்றும் ஜப்பான் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

ரஷ்யா – ஜப்பான் கடல் பகுதிகளை சுனாமி தாக்கியது 


Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

ரஷ்யாவில் இன்று காலை (ஜூலை 30) 8.7 என்ற ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா – ஜப்பான் கடல் பகுதிகளை சுனாமி தாக்கியதாக கூறி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது rk_vicky_balran என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், heavy rain, viral reels போன்ற hastagகள் பயன்படுத்தி ஜுலை 1, 2025 அன்று இந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


இது குறித்து மேலும் தேடி பார்த்ததில் ZSTravelVlogOfficial என்ற யூடியூப் பக்கத்திலும் ஜுலை 22ஆம் தேதி இதே வீடியோ பதிவாகியிருந்தது. 


இதை போல் Kashmir News sahil என்ற பேஸ்புக் பக்கத்தில் ஜூலை 24 அன்று இந்த வீடியோ பதிவாகியருந்தது. அதில் குழந்தைகள் தண்ணிரில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென நீர்மட்டம் உயர்ந்தது என்றும், அனைவரும் காப்பாற்றப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து இது குறித்து ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது உருது ஊடகமான munsif tv india என்ற ஊடகத்தில் ஜுலை 25 இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. உருது மொழியில் இருந்த அந்த செய்தியை மொழிபெயரப்பு செய்து பார்த்தபோது, ரீலஸ் செய்யும் போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றும், ரீலஸ் எடுக்கும்போது முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. 

முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் வீடியோ ஜுலை 1 முதலே பல்வேறு சமூகவலைதலப்பக்கங்களில் பகிரப்பட்டு  வருவது தெரியவந்தது. இதை  ரஷ்யா மற்றும் ஜப்பான் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க